
நட்சத்திரம்
வான மங்கையின்
பருக்களோ
நட்சத்திரங்கள்!
*****
விலைவாசி
உழைத்தால் உயரலாம்
என்கிறார்கள்…
ஆனால்,
உழைக்காமலேயே
உயர்கிறது
விலைவாசி!
*****
வேண்டுதல்
இறைவா…
இன்னும் ஒரு
இதயம் கொடு;
அதையும் அவளிடம்
இழப்பதற்கு!
*****
உலகம்!
அடிக்கடி சிரிக்கிறேன்…
உலகம் என்னை
பைத்தியம் என்கிறது!
அடிக்கடி நீ சிரிக்கிறாய்…
உலகம் அதை
கவிதை என்கிறதே?
– பி.சி.ரகு, விழுப்புரம்
……………………………………………………….
எந்த கடன்காரனுக்கு
பயந்து
இப்படி ஒளிந்துக்கொண்டாய்…
மாம்பழத்துக்குள் வண்டு!
*****
அதிகாரமிருந்தும்
ஆட்சிக்கு வர மனமில்லை;
திருக்குறள் எழுதிய
திருவள்ளுவர்!
– ஜி.பாபு, திருச்சி