
காதல் ஒரு தீப்பந்தம். அது இ்ல்லையெனில் உலகம் அனணந்தே போய்விடும். – பாரதியார்
காதலெனும் நீருற்று என்றும் மாசு படியாதது, பரிசுத்தமானது.
– ஷேக்ஸ்பியர்
காதல் நான்கு கண்கள் காணும் ஒரே கனவு – மு. மேத்தா
போர் வாளின்றி தன் சாம்ராஜ்யத்தை ஆள்வது காதல்
– கவிஞர் கண்ணதாசன்
காதல் பேச முற்பட்டுவிட்டால் ஊமைகூட புரிந்துகொள்வான்
– ஸ்விப்ட்
காதல் அடிமேல் அடிவைத்து மெல்ல வருகிறது. போகும்போது கதவை பலமாக சாத்திவிட்டுச் செல்கிறது.
– ராபர்ட் லெம்ப்கே
காதல் அனைத்தையும் படைத்திடும் ஆற்றல் மிக்கது. எல்லோரும் விரும்புவது. அழகானது.
– பைரன்
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்
கார்ல் வின்ஹெல் என்பவர் ஜெர்மன் ராஜதந்திரி. அவர் கவிஞரும்கூட. இவர் தனது கவிதையாற்றலை காதல் மனைவியின் புகழ் பாடவே பயன்படுத்தினார். தினம் நூறு வரி கொண்ட கவிதையை தன் மனைவி மீது இயற்றி வந்தார். அவருக்கு ஆறு வருடங்கள் முன்னதாக மனைவி இறந்துவிட்டாள். ஆயினும் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. வழக்கப்படி நூறு வரி எழுதி கல்லறை மீது போட்டு வந்தார். மனைவி மீது அவர் இப்படி கவிதை எழுதியது எவ்வளவு காலம் தெரியுமா? 44 வருடங்கள்.
இத்தாலியில் திருமணம் ஆகாத இளம்பெண்கள் காதலர் தினம் அன்று சூரியன் உதிக்கும் முன் எழுந்து ஜன்னலருகில் நின்று வெளியே பார்ப்பர். அவர்கள் சாலையில் முதலில் பார்க்கும் ஆண்மகன் அவர்களின் மணமகன் ஆவதுடன் திருமணமும் ஒரு ஆண்டில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் அங்கு உண்டு.
-ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி