திக்… திக்… திக் ! அமானுஷ திகில் அனுபவங்கள்! 

திக்… திக்… திக் ! அமானுஷ திகில் அனுபவங்கள்! 
Published on

சுசீலா மாணிக்கம்.

பெரிதாக ஒன்றும் தேவையில்லை. சில சமயங்களில் நம் விட்டுக் குழாயில் இருந்து சொட்டும் டக் டக் சப்தம், Paper Fan காற்றில் அசையும் சப்தம், கடிகார டிக் டிக் என சில சமயங்களில் நம் பெருங்குடல் தொண்டைக்கும் வரும் அனுபவங்களும் ஏற்பட்டிருக்கும். (வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருளுவது போல… ஒட்டு மொத்தமாய் பெருங்குடல் சுருண்டு வந்து தொண்டையை அடைப்பது போல…) அப்படிப்பட்ட ஒர் அனுபவத்தைத் தான் பகிர்ந்து கொள்கிறார் நமது வாசகத் தோழி சுசீலா மாணிக்கம்.

'திக் திக்' னு மனம் பதற படியுங்கள்… உங்களுக்கும் இது போன்ற 'திகில்' அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், "டக் டக்னு'' மின்னஞ்சல் வழியே அனுப்புங்க mm@kalkiweekly.com 

னக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும், அறியாத வயதில், விவரம் புரியாத பெண்ணாய்… அப்போது நான் 8ம் வகுப்பு. தருமபுரியில் இருந்தேன். 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் கிராமம் ரொம்ப அழகாக இருக்கும். நல்ல கிளைமேட்… வெள்ளந்தியான மக்கள்… வரம் பெற்ற நாட்கள் அவை…

பக்கத்து வீட்டில் பத்மா அக்காஇருந்தாங்க. அப்போதெல்லாம் கதை புத்தகங்கள் அவர்கள் வீட்டில்தான் வாங்குவார்கள். அவர்கள் வீடு சென்று படிப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான்.

ஓட்டு வீட்டு முன்பக்கம், ஒரே ஒரு மஞ்சள் குண்டு பல்பு. அதன் கீழ் கயிற்றுக் கட்டில். சற்று தொலைவில் வாழை மரங்கள், தோட்டம் மற்றும் கிணறு. சாதாரண நாட்களிலேயே யாரோ நடப்பது போன்ற பிரம்மை தட்டும். அப்போது இரவு 7 மணி இருக்கும். கட்டிலில் அமர்ந்து நானும் பத்மா அக்காவும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தோம். அந்த அக்கா பாட புத்தகம், நான் மர்ம தொடர்.

திடீரென அக்கா, 'குட்டி, நீ படிச்சிட்டு இருடா.. நா வீட்டுக்குள்ள போயி நோட்ஸ் எடுத்துட்டு வந்துடறேன்,' எனக் கூறி வீட்டுக்குள் சென்று விட,

அப்போதுதான் நிமிர்ந்து பார்க்கிறேன் ஒவ்வொரு மரமும் ஓர் ஆள்போல தெரிகிறது. சரி நாமும் இறங்கி வீட்டுக்குள் ஓடிவிடலாம் என நினைத்த போதுதான் அந்த highlight சம்பவம் நடந்தது.

ஆம். கட்டிலை விட்டு இறங்க கால்களை தொங்கப்போடும் போதெல்லாம் கட்டிலுக்கடியில் இருந்து கர்ணகடூரமான 'குர்' எனும் சப்தம். கால்களை மேலே தூக்கிக் கொண்டால் நிசப்தம். கால்களை கீழே போட்டால் 'குர்' . மேலே எடுத்துக் கொண்டால் 'Nil'. 

மீண்டும் 'scenary' யை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்… வீட்டின் முக்கால்வாசி பாகம் தோட்டம். ஒரே ஒரு ஓட்டு வீடு. மஞ்சள் குண்டு பல்பு. திண்ணையில் கயிற்றுக் கட்டில். கட்டிலின் மேல் தனியே நான். கைகளில் மர்ம நாவல். மணி சுமார் இரவு ஏழு. 'குர்' 'Nil'- 'குர்' 'Nil' situation.

பெருங்குடல் சுருண்டு தொண்டைக் குழியை மொத்தமாய் அடைத்துக் கொள்ள… முச்சுத் திணற… கண்களில் கண்ணீர் வழிய…

super star ஒரு படத்தில் பாம்பைப் பார்த்து, 'ப…..ப….'என்பாரே அதே effect ல பத்மா அக்காவை அழைக்க 'ப…..ப….' என திணற,

'Sorry da குட்டி. bath room போயிட்டு வந்தேன்,' என கூறிக் கொண்டு  அவர் என் அருகில் வந்தார்.

விழி பிதுங்கி, வாய் கோணி வேர்த்து அமர்ந்திருந்த என் அழகை பார்த்து அதிர்ச்சி அடைந்து 'குட்டி என்னாச்சு… குட்டி என்னாச்சு' என அவர் என்னை உலுக்க, மீண்டும் கட்டிலுக்கடியிலிருந்து அதே 'குர்' சப்தம் இன்னும் கர்ணகடூரமாய் கேட்டது.

அக்காவின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் நிலை பெற்றுவிட்ட கருவிழிகளை பெயர்த்து அக்காவை பார்த்து கேட்க நினைக்கிறேன்… முடியவில்லை. ஆதிவாசி பாணியில் கட்டிலுக்கடியில் கரங்களை சுட்டிக் காட்டுகிறேன். 'ஓ… அதுவா… கோழி அடைகாக்குது குட்டி' என படு casual ஆக பத்மா அக்கா பதில் கூறினார்.

ஆயிரம் side dancers வந்து என் பின்னால் ஆட, மனதும் உடம்பும் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், தொண்டைக்குழிக்குள் சிக்கிய பெருங்குடல் மட்டும் சாமாணியமாய் இறங்க மறுக்கிறது.

'ஐயோ அக்கா நான் பயந்தே போயிட்டேன். பேய்னு நெனைச்சிட்டேன்' – என்று திக்கித்திணறி, கண்களோ பாத்ரூமை தேட, கால்கள் பாத்ரூம் நோக்கி ஓட, பத்மா அக்காவின் சிரிப்பும், கோழியின் 'குர்' சப்தமும் இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com