ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
ஓவியம்: பிரபுராம்

"என் மனைவி மார்டன் ஆர்ட் மாதிரி…

"அவ்வளவு அழகா?"

"இல்ல, புரிஞ்சிக்கவே முடியாது.

******************************************

"மரம் நடுவிழாவுல என்ன கலாட்டா?"

"கடைசியில் வெறும் செடியை நடச் சொல்லிட்டாங்கன்னு தலைவர் சண்டை பிடிச்சிட்டாரு.

******************************************

"நீ சாப்பாடு போடாம இப்படியே சீரியல் பார்த்துட்டு இருந்தனா, நான் தர்ணா பண்ணுவேன்…

"அப்படி ஓரமா போய் பண்ணுங்க. டி.வி. மறைக்குதுல.
ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

******************************************

"புதுசா ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன்…

"மறக்காமல் அட்டையில் நம்பர் 1 பத்திரிகை என்று போட்டுருங்க…

******************************************

"வேட்பாளர் ஏன் கடுப்பாக இருக்கிறார்?"

"வெற்றி வேட்பாளர் என்று சொல்வதற்குப் பதிலா இவரை வெட்டி வேட்பாளர் என்று சொல்லிவிட்டாராம்…
– எஸ். மோகன், கோவில்பட்டி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com