சுதந்திரப் போராட்ட வீரர்கள் – பரவலாக அறியப்படாத பின்னணிகள்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் – பரவலாக அறியப்படாத பின்னணிகள்
Published on

-ஜி.எஸ்.எஸ்.

பால கங்காதர திலகர்
பால கங்காதர திலகர்

பால கங்காதர திலகர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர்.
சிறந்த வானியல் நிபுணரும் கூட. ரிக் வேத காலத்தைச் சேர்ந்த ஆரியர்களின் தோற்றம் மற்றும் காலம் குறித்து அவர் செய்த ஆராய்ச்சிகள் உலகளவில் பாராட்டப்பட்டன.

ஜவகர்லால் நேரு
ஜவகர்லால் நேரு
சர்தார் பாடீல்
சர்தார் பாடீல்

ந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.  ஆனால், பிரதமருக்கான தேர்தலை வென்றவர் சர்தார் பாடீல். யாருக்கும் கீழே பணிபுரிய நேரு விரும்பவில்லை என்பதும் காந்திஜிக்கு நேருவின் மேல் ஒரு தனி அபிமானம் உண்டு என்பதும் அவரை பிரதமராக்கக் காரணமாக அமைந்தன. சுதந்திரப் போராட்டத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான நாட்கள் சிறையில் கழித்தவர் நேரு.

பகத்சிங்
பகத்சிங்

ஃப்ரென்ச்,  ஸ்வீடிஷ்,  ஆங்கிலம்,  அராபிக்,  ஹிந்தி,  பஞ்சாபி ஆகிய அத்தனை மொழிகளிலும் சரளமாகப் பேசும் வல்லமை படைத்தவர் பகத்சிங்.

வீர சாவர்க்கர்
வீர சாவர்க்கர்

தனக்குப் பதினோரு வயது ஆனபோது வீர சாவர்க்கர் சிறுவர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தார் அதற்கு வானர சேனை என்று பெயரிட்டார்.  அவர்களுடன் சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார்.

பகத் சிங்கின் அப்பா கிஷன் சிங் நிறைய சமூக சேவைகளில் ஈடுபட்டவர் 1898ல் விதர்பா பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.  இதனால் பல விவசாயிகள் அங்கு தற்கொலை செய்து கொண்டார்கள்.

கிஷன் சிங்
கிஷன் சிங்

அந்த இடத்துக்குச் சென்ற கிஷன் சிங் அவர்களுக்கு உணவுப் பொருள்களை அளித்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை.  திரும்பி வரும்போது ஐம்பது அனாதைக் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து வந்தார்.  இந்தக் குழந்தைகள் பஞ்சத்தால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகள்.  இவர்களைக் கொண்டு பெரோஸ்பூரில் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை அமைத்தார். இதைச் செய்யும்போது அவருக்கு வயது வெறும் இருபதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி பள்ளியில் ஆங்கிலப் பாடத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று வந்தவர்.  அவர் குறைவான மதிப்பெண்கள் பெற்றது பூகோளம் எனப்படும் நிலவியல் பாடத்தில்.

சுபாஷ் சந்திரபோஸ்
சுபாஷ் சந்திரபோஸ்

தீவிரவாதத்தைக் கையிலெடுத்த சுபாஷ் சந்திரபோஸ் தனது பதினாறாவது வயதில் ராமகிருஷ்ணரின் உபதேசங்களால் பெரிதும் கவரப்பட்டவர்.

லட்சுமிபாய் , நானா சாகிப்
லட்சுமிபாய் , நானா சாகிப்

ராணி லட்சுமி பாயின் நெருங்கிய உறவினர்கள் நானா சாகிப் மற்றும் தாத்யா தோபே ஆகிய சுதந்திர போராட்ட வீரர்கள். சிறுவயதிலேயே குதிரை ஏற்றம் வாள் சண்டை போன்றவற்றைத் திறம்படக் கற்றுக் கொண்டவர் ஜான்சிராணி எனப்படும் லட்சுமிபாய்.

திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன்

தமிழ்நாட்டின் திருப்பூர் குமரன் போல மேற்கு வங்கத்தில் மாதங்கி ஹஸ்ரா என்பவர்  மிகப் பிரபலம். ஒரு ஊர்வலத்தின்போது கையில் இந்தியக் கொடியை சுமந்தபடி அவர் பிரிட்டிஷாரின் ஆணையை மீறிச் சென்று மறியல் ஊர்வலம் சென்றபோது மும்முறை சுடப்பட்டு இறந்தார். தன் கடைசி மூச்சுவரை வந்தே மாதரம் என்ற கோஷத்தை எழுப்பினார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கல்வி பயிலவில்லை.

மாதங்கி ஹஸ்ரா
மாதங்கி ஹஸ்ரா

இவருக்குப் பன்னிரண்டாவது வயதில் திருமணம் நடத்தப்பட்டது. திருமணமான
ஆறே வருடங்களில் கணவனை இழந்தார்.
காந்தியின் கொள்கைகளால் பெரிதும்
கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபட்டு சிறை சென்ற இவருக்கு
கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில்
சிலை எழுப்பப்பட்டிருக்கிறது.

அசரத் பேகம்
அசரத் பேகம்


அசரத் பேகம்
கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டவர். லக்னோவை
பிரி​ட்டிஷ்காரர்களிடமிருந்து, தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, கைப்பற்றவும் செய்தார். ஆனால் மீண்டும் ஆங்கிலப் படையிடம் லக்னோவை இழக்க நேரிட்டதால் பேகம் பின்வாங்கினார். இந்திய மன்னர்கள் யாரும் அவருக்குப் புகலிடம் அளிக்க முன்வரவில்லை. நேபாளத்திற்குச் சென்றார். அங்கும் அவருக்குப் புகலிடம் மறுக்கப்பட்டது. பின்னர் இமயமலைக் காடுகளிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்தார் பேகம். லக்னோவில் அவரது நினைவாக பளிங்குக் கல்லால் ஆன நினைவகத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது. இந்திய அரசும் பேகமின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

கன்னையலால் மனேக்லால் முன்ஷி
கன்னையலால் மனேக்லால் முன்ஷி

கன்னையலால் மனேக்லால் முன்ஷி
என்பவர் குலபதி என்று போற்றப்படுபவர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்
மிகத் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டவர்.
பல முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டவர்.
பாரதிய வித்யா பவனை
நிறுவியவரும் இவர்தான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com