அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on
அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ?

-ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்

"சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே' ஆஃபர்தான்!

சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா?

தனியாகப் படுக்கவைத்தால் பாதுகாப்பு இல்லை; கூடவே படுத்தால் நாம்ப ஒருக்களித்துதான் படுக்கணும். இதற்கு நல்லதொரு தீர்வை வடக்கு ரயில்வே செயல்படுத்தியுள்ளது. 'லக்னோ மெயில்' ரயிலில் முன்பதிவு செய்யும்போது தாயும் சேயும் இணைந்து படுக்கும்படியான புதிய படுக்கை வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த 'பேபி-பெர்த்' வசதியை 70 விரைவு ரயில்களில் ஏற்பாடு செய்ய நமது தெற்கு ரயில்வேயும் திட்டமிட்டுள்ளதாம். நல்ல செய்தி!

'மதர்ஸ் டே'க்கு உகந்த, மகிழ்ச்சியான ஏற்பாடும்கூட!

*****************

சமீபத்துல நீங்க ரசிச்ச சினிமா பாடல் எது?

-மஞ்சு வாசுதேவன், பெங்களூரு

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்துல வர்ற 'டுடுடுடு டுட்டு' பாடல்தான். நயனும் சமந்தாவும் செம எனர்ஜி… "என்னா… அனுஷா உன்னோட டேஸ்ட்னு?"னு நீங்க து_ _ னாலும் பாட்டும் டான்ஸும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்குதே! குறிப்பா 'தூ' என சமந்தா துப்புவதும், அதற்கு விஜய்சேதுபதி காட்டும் ரியாக்ஷனும், தோதாக பின்னணியில் ஒலிக்கும் அந்த நக்கலான நாதஸ்வர பிட்டும்… ரியல்லி ஃபன்னி!… அடிபொளி!

*****************

மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து விட்டதாகச் செய்திகள் வருகின்றனவே!

-மல்லிகா ஸ்ரீகுரு, சென்னை

மிஸஸ் மல்லி, இந்த கொரோனா இருக்கே, கொரோனா… அது ரொம்பவே ஈகோ பிடிச்சதாம்… நீங்களா வெளியே போய், கைய்ய கிய்ய பிடிச்சு, "வாங்கோன்னா"ன்னு வற்புறுத்திக் கூப்பிட்டாதான் நம்ப வீட்டுக்குள்ளயே வருமாம்!

ஈகோ பிடிச்சவங்களோட நமக்கெதுக்கு சங்காத்தம்? ப்ளீஸ் ஸ்டே ஹோம்! ஸ்டே சேஃப்!

*****************

'சம்சாரம் அது மின்சாரம்', 'வாழ்க்கை' எந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் சிறப்பு?

-சி.கார்த்திகேயன், சாத்தூர்

ரண்டுமே கிட்டத்தட்ட ஒரே கதைதான்! சுயநலமிக்க, உதவாக்கரைப் பசங்களால் பாதிப்புக்குள்ளான பெற்றோரின் கதை! 'சம்சாரம் அது மின்சாரம்' – சீரியஸான விஷயத்துக்கும் சிரிப்பு ட்ரீட்மென்ட் கொடுத்ததால் சூப்பர் ஹிட் ஆனது.  (குறிப்பாக மனோரமாவின் 'கம்முன்னா… கம்… கம்முனாட்டி கோ!")

'வாழ்க்கை' – கிளிசரின் காட்சிகளாலும் வசனத்தாலும் மனத்தை உருக்கினாலும், ஹெவி ட்ரீட்மென்டால் ஏக சோகம்!

முன்னதில் க்ளைமேக்ஸில் மருமகள் லட்சுமி பேசும் 'பஞ்ச்' வசனத்தால் படம் நங்கூரமிட்டு நின்றது.

பின்னதில் தன் சொத்துக்களில் சில லட்சங்களை மட்டும் நன்றி கெட்ட மகன்களுக்குக் கொடுத்துவிட்டு ("அது அவங்க எனக்குக் கற்றுக் கொடுத்த பாடத்துக்கான ட்யூஷன் ஃபீஸ்!") மிச்ச சொத்தில் இலவச முதியோர் இல்லம் கட்டுவது போல காட்சி அமைப்பு இருக்கும்…

விசு ஸ்டைல்: யதார்த்தம்!  சிவாஜி ஸ்டைல்: ஆதர்சம்!!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com