ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள் : பிள்ளை

"ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!"

"நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!"
வி.ரேவதி,தஞ்சை

—————————–                         

"இந்த ஆஸ்பத்திரியில எப்பவும் ஒரு மாந்திரீகர் இருக்காரே?"

"டாக்டரால கண்டுபிடிக்க முடியாத வியாதியை மை போட்டு கண்டுபிடிக்கவாம்!"
-வி. ரேவதி, தஞ்சை

—————————–  

"ஒரு ஒட்டு வாங்கினவரு பிரபல சோதிடர் கிட்ட  ஜாதகத்தைக் கொடுத்து பார்க்கச் சொன்னாராம்!"

 "என்ன பார்க்கச் சொன்னாராம்?"

"தனக்கு கவர்னர் ஆகிற வாய்ப்பு இருக்கான்னுதான்!
 -வி. ரேவதி, தஞ்சை

—————————–  

"கட்சி மாறிடலாம்னு இருக்கேன்யா!"

"இனி நீங்க மாறுறதுக்கு எந்தக் கட்சி  பாக்கி இருக்கு தலைவரே?"
சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா

—————————–  

"நம்ம ஊர்ல விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் தலைவரும் ஒருத்தர்!"

"எப்படிச் சொல்றே?"

"பள்ளிக்கூடமே போனதில்லையே!"
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா

—————————–  

"வருடம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?"

"பொழிகிறது. ஆனா முன் மாதிரி இல்ல. தூரலோடு நின்றுவிடுகிறது மன்னா".
ஜெயகாந்தி  மகாதேவன்

—————————–  

"மனநல மருத்துவர்: சொல்லுங்கம்மா, உங்க மாமியார் கிட்ட என்ன பிரச்னைன்னு கூட்டிட்டு வந்திருக்கிங்க?"

"மருமகள்: டாக்டர், அவங்க முன்ன மாதிரி என் கூட சண்டையே போட மாட்டேங்கறாங்க. கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க… ப்ளீஸ்."

"மருத்துவர்: ?????"
-ஜெயகாந்தி  மகாதேவன்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com