
* கொய்யா முதுமைத் தோற்றத்தைப் போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
* கல்லீரலில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது.
* ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
* கொய்யாப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
* அல்சரைக் குணப்படுத்த வல்லது கொய்யாப்பழம்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை, மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு தருகிறது.
* இரத்த ஓட்டத்தை சீராக வைக்க கொய்யாப்பழம் உதவுகிறது.
* நுரையீரலில் உள்ள அசுத்தத்தை நீக்க வல்லது கொய்யாப்பழம்.
* மதுவுக்கு அடிமையானவர்களுக்கு தினமும் கொய்யாப்பழம் கொடுத்து வந்தால் அவர்களுக்கு மது அருந்தும் ஆசை அகன்று விடும்.
-எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்
=============================
தேவை:
வெள்ளரிக்காய் அரைத்த விழுது – 1 கப்
உளுந்து – 2 ஸ்பூன்.
மிளகு,சீரகம் – 1 ஸ்பூன்.
கடுகு – ½ ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்.
புளி, உப்பு அரைத்த விழுது – 2ஸ்பூன்.
நெய் – 2ஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, உளுந்து, கடலைப்பருப்பு , மிளகு, சீரகம் வறுத்து பொடிக்கவும்.
மீதி நெய்யில் கடுகு தாளித்து,வெள்ளரி விழுது, வறுத்தரைத்த பொடி,புளி விழுது சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெள்ளரித் துவையல் சூடான சோற்றில் கலந்து சாப்பிடத் தயார்.
=============================
தேவை:
ஆவாரம்பூ உலர்ந்தது – ஒரு கப்
முழு உளுந்து – ½ கப்.
இஞ்சி நறுக்கியது – 1 ஸ்பூன்.
மிளகாய் வற்றல் வறுத்தது – 10
சீரகம் – 1 ஸ்பூன்.
பட்டை, கிராம்பு – தலா 2
பெருங்காயம் – சிறு துண்டு.
உப்பு – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மேலே கூறிய அனைத்தையும், மிதமான தீயில் வறுத்து மின் அரைவையில் பொடிக்கவும்.
சுவையான ஆவாரம் பூ இட்டிலிப் பொடி சுவைக்கத் தயார். இதைச் சோற்றில் பிசைந்தும் சாப்பிடலாம்.
-செ.கலைவாணி, சேலம்
=============================
* பிரண்டையில் இருந்து ஆறு தேக்கரண்டி சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் தவறாமல் வரும்.
* அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.
* பிரண்டைத் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
* பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.
* பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது. இதனால் பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்கிற பெயரும் உண்டு.
* பிரண்டை வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.
* பிரண்டையை காய வைத்து தூள் செய்து நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.
* பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வர, உடல் ஆரோக்கியம் பெறும். உடல் எடை குறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி, செரிமான பிரச்சனை, நீங்கும். மேலும் வாய்ப் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு, வயிற்று வலி ஆகியவற்றிக்கு சிறந்த பலனை தரும்.
-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்
=============================
பச்சையும்,சிவப்பும் கலந்த நிறத்தில் இனிப்பும் துவர்ப்புமாய் இருக்கும் கொடுக்காய்ப் புளி சுவையுடன் ஆரோக்கியத்தையும் தர வல்லது. வைட்டமின் B மற்றும் C நிறைந்த கொடுக்காய்ப் புளியை நம் குழந்தைகளுக்கு கொடுத்து வர நரம்புகள் பலம் பெறும். மூளையை நன்கு இயங்க செய்து வலுப் பெற செய்யும். இதில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
கொடுக்காய்ப் புளியின் சதைப் பகுதியை சாப்பிட்டு வர உடல் எடை குறையும். சரும பிரச்னை நீங்கி, தோல் பளபளக்கும். இளமையான தோற்றத்தை அளிக்கும். முடி உதிர்வதையும் தடுக்கும்.
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப் போக்கை சரி செய்து, குடல் புண்னை குணமாக்கும்.
கொடுக்காய்ப் புளி விதைப் பொடியுடன், சீரகப் பொடி தேன் சேர்த்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். இதன் இலைச் சாறு கருப்பை நோய் களுக்கு மருந்தாகும். இதன் பட்டை மற்றும் சதைப் பகுதி பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகும்.
மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால் நீரிழிவு உள்ளவர்கள் தாராளமாக உண்ணலாம்.
-வி.ரத்தினா, ஹைதராபாத்.