ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள்: பிள்ளை

"உன் புருஷனுக்கு சமைப்பது 'கைவந்த கலை'ங்கிறியே! ரொம்ப வருஷமா சமைத்திருக்கிறாரா?"

"இல்லை! நேத்துதான் முதன் முதலா சமைச்சார்! அதுலேயே கையில கொதிக்க, கொதிக்க சாம்பாரை கொட்டிக்கிட்டு, 'கைவெந்த கலை' ஆயிடுச்சு!

-சம்பத்குமாரி, பொன்மலை

…………………………………………

"சர்வர் சரியா கிடைக்காததால தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம்கிறாரே! அவர் என்ன ஓட்டல் வச்சிருக்காரா?"

"இல்லை. IT கம்பெனி வச்சிருக்கார்!"

-சம்பத்குமாரி, பொன்மலை

…………………………………………

"அந்த இளைஞர் அப்படி என்ன கேட்டார்…? நம்ம பேங்க் மானேஜர் கடுப்பாயிட்டார்?"

"ஸ்டார்ட் – அப் நிறுவனங்களுக்கு கடன் தர்ற மாதிரி, ஸ்டார்ட் – அப் காதலுக்கு கடன் தர முடியுமான்னு கேட்டாராம்!"

-சம்பத்குமாரி, பொன்மலை

…………………………………………

என்னது? "சாப்பிடற பண்டங்கள் ருசியே தெரியாமல் மண்ணு மாதிரி இருக்கா?"

"முப்பது வருஷமா அப்படித்தான் இருக்கு டாக்டர். கல்யாணம் ஆனதில் இருந்து!"

– ஆர். யோகமித்ரா, சென்னை

…………………………………………

"புலவரே… முதலில் உமது எழுத்தாணியை கூர் தீட்டும்."

"ஏன் மன்னா?"

"ஓலையில் எழுத்தே பதியவில்லை"

–  ஆர். யோகமித்ரா, சென்னை

…………………………………………

"என்னது இட்லியில மல்லிகைப்பூ வாசனை வருது?"

"நீங்கதானே இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்கணும்னு சொன்னீங்க!

– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

…………………………………………

"என்ன புது டிபன் செய்தாலும் முதல்ல என் மாமியாருக்கக் கொடுப்பேன்!

"டேஸ்ட் பண்ணவா?"

"இல்ல டெஸ்ட் பண்ண!

– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com