
எங்களின் வேர்கள்
பிடித்திருப்பது
மண்ணையல்ல
உங்களின் மனங்களை
பறவைகள் கூட
விதைக்கும் எங்களை
மனிதர்கள் ஏன்
சிதைக்கிறீர்கள்?
நாங்கள்
மழை, காற்றின்
வாகனங்கள்
உங்கள் பராமரிப்பு
நேசமெனும்
எரிபொருளால்
நிரப்புங்கள்
உங்கள் பேர் சொல்ல
ஒரு மரம் நடுங்கள்
எங்கள் கிளைகள்
கிளைகலல்ல
மனித உடலின்
மூச்சுக்குழாய்கள்
இலைகளெல்லாம்
உலகின் நுரையீரல்கள்
அடிமரம் பூமியின்
அஸ்திவாரம்
வேர்களெல்லாம்
அண்டத்தின் கால்கள்
இயற்கை விஞ்ஞானியின்
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
நாங்கள்
பறவைகளின் பாசறை
உயிரினங்களின் ஊன்றுகோல்
நீங்கள் வெட்ட நினைப்பது
எங்களை மட்டுமல்ல
உங்கள் ஆரோக்யத்தையும்
ஆயுளையும் தான்
இலைகளில் உள்ள
ஈரம் கூட உங்கள்
இதயத்திலில்லையா?