இதழ்கள்
சிறிய பூந்தொட்டி செய்வது எப்படி?
கைவேலை!
-துளசி கண்ணன்
தேவையான பொருட்கள்: (படம்1)
Fevicryl Acrylic வண்ணங்கள்
- Fevicryl mouldit
- Fevicryl துணி பசை
- டால்கம் பவுடர்
- டூத் பிக்
- பழைய கோலா பாட்டில்
- பெயிண்ட் ப்ரஷ்
செய்முறை :
Fevicryl mouldit எடுத்து, அதில் இருக்கும் இரண்டு பகுதிகளை சமமாக பிரித்து பிசையவும். இரண்டு வேறு வேறு நிறங்களும் இணைந்து வெள்ளை நிறத்தில் வரும் வரை நன்றாக பிசையவும் (படம் 2). டால்கம் பவுடரை mouldit ஒட்டாமல் இருக்க பயன்படுத்தவும்.
- இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பகுதிக்கு, நீளமான டூத் பிக்கை எடுத்து mouldit வைத்து உருட்டவும். (படம் 3)
- அடுத்து பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து பாதியாக வெட்டி எடுக்கவும். பின் அதில் பிசைந்து வைத்த mouldit பட்டையாக தேய்த்து அந்த பாட்டிலின் மேல் தடவி பசை வைத்து ஒட்டவும். (படம் 4)
- இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து கால் உடம்பு தயார். அனைத்தையும் நன்றாக பசை வைத்து ஒட்டவும். (படம் 6)
- ஒட்டகச்சிவிங்கியின் தலைப் பகுதிக்கு mouldit உருட்டி கொம்புக்கு தீக்குச்சியை சொருகி ஒட்டவும். (படம் 7)
- இப்பொழுது அனைத்து பகுதிகளை ஒட்டிய பின், காய்ந்தவுடன் பெவிக்ரில் அக்ரலிக் கலர் பயன்படுத்தி வண்ணமிடவும். (படம் 8)
- பின் நடுவில் வெள்ளை வண்ணம் தீட்டி, உடலில் புள்ளிகள் வைத்து அழகு செய்யலாம். (படம் 9)
- இப்பொழுது அழகான சிறிய பூந்தொட்டி தயார். இதில் நாம் மண் வைத்து அழகான செடியை நடலாம். (படம் 10)