ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
-வி. ரேவதி, தஞ்சை
ஓவியம்; பிரபுராம்

"அந்த சாமியார் ரொம்ப டிரெண்டிங்கா இருக்காரே…?"

"எப்படிச் சொல்ற?"

"கல்யாணம் ஆகப்போற எனக்கு ஆசி வழங்குங்கன்னு சொன்னா," விவாத பிராப்தி ரஸ்து!" ன்னு சொன்னாரே!"

*************************

"காதலி:  " எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடிச்சு ரமேஷ்!"

காதலன்: "ரொம்ப சந்தோஷம் டார்லிங்… எனக்கும் ஒரு நல்ல  பொண்ணா  இருந்தா பாரேன்! "

*************************

"தூக்கமே வரமாட்டேங்குதுன்னு மானேஜர்கிட்ட சொன்னது தப்பா போச்சு,!"

 "என்னாச்சு?"

"அப்படின்னா, V .R.S. வாங்கிட்டுப் போ'ன்னு சொல்றாரு!"

*************************

ஜோக் எழுத்தாளர்: "நான் எது சொன்னாலும் என் மனைவி கேட்பா,' ஒண்ணைத் தவிரl."

ஒருத்தர்: "அந்த 'ஒண்ணு' என்ன?"

ஜோக் எழுத்தாளர்:  "வேற என்ன!  நான் சொல்ற ஜோக்குதான்!

*************************

"மொட்டைக் கடுதாசு எழுதறதுக்குன்னே எங்க ஆபீஸ்ல 2 பேர் இருக்காங்க!"

 "யாராரு…?"

"பழனியும், திருப்பதியும்தான்!"

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com