
-ஆர். மீனலதா
மும்பை செம்பூரின் லேண்ட் மார்க்காக பிரகாசித்துக் கொண்டிருக்கும் Fine Arts Society (FAS), தனது 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1962 ஆம் ஆண்டில் சிறியதாக ஆரம்பித்த இக்கலாசார அமைப்பு, இன்று 60,000 சதுர அடிகளைக் கொண்டு வானளாவி நிற்கிறது. இங்கிருக்கும் சங்கீதப் பள்ளியில் 1200க்கும் மேல் மாணவ மாணவிகள் பயில்கிறார்கள். இயல், இசை, நாடகத்தை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது இந்த அமைப்பு.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கண்டறிந்து அவர்களுக்கு 'ஸ்த்ரீ ரத்னா' (Stree Ratna) விருதினை 2013 ஆம் ஆண்டு முதல் அளித்து கெளரவித்து வருகிறது FAS அமைப்பு. திருமதி. ருக்மணி கிருஷ்ணமூர்த்தி, வாணி ஜெயராம், ஹேமமாலினி போன்ற பல முன்னணி கலைஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளார்கள்.
சென்ற வாரம், மார்ச் 12 ஆம் தேதி, ஸ்த்ரீ ரத்னா விருது 2022 பெற்ற முத்தான பெண்மணிகள் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு…
ஸ்வர யோகினி டாக்டர். பிரபா ஆத்ரே
கடந்த 65 வருடங்காலமாக ஹிந்துஸ்தானி இசையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இவர் பன்முகம் படைத்தவர்.
'கிரானா கரானா'(Kirana – Gharana) பாடுவதில் வல்லவர். இவர் எழுதிய
இசை சம்பந்தப்பட்ட 11 புத்தகங்கள்
ஒரே மேடையில் வெளியீடனாது
உலக சாதனையாகும்.
டாக்டர் N. ராஜம் (வயலின் கலைஞர்)
பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற இவர்
கர்நாடிக் மற்றும் ஹிந்துஸ்தானி ஸ்டைலில்
வயலினை வாசிப்பதில் வல்லவர்.
பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் 40
வருட காலம் Dean ஆகப் பணியாற்றியவர்.
மேலும் Emeritus Professor பட்டம் பெற்றவர்.
தனது 'Gayaki Ang' வழியாக பாதையை உருவாக்கி ஹிந்துஸ்தானி ஸ்டைலுக்குள் நுழைந்த
இவரை அறியாதவர்கள் கிடையாது.
திருமதி சாந்தா தனஞ்ஜெயன் (பரதநாட்டிய கலைஞர்)
பத்மபூஷன் விருது பெற்ற இவர் கலாஷேத்ரா நடனப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றவர். இசை நாடகத்தின் தலைமைப் பாடகியாக (Prima Donna) 15 வருட காலம் செயல்பட்டவர். தனது கணவர் திரு. தனஞ்ஜெயனுடன் இணைந்து 'பரத கலாஞ்சலி' அமைப்பை உருவாக்கி, அநேக நடனம் மற்றும் இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் ஆதர்ச தம்பதிகள். பலவகை கமர்ஷியல் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளனர். இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப் படமொன்று விரைவில் வெளிவர இருக்கிறது.
டாக்டர் மல்லிகா சாராபாய்
குச்சிப்புடி மற்றும் பரத நாட்டியக் கலைஞரான இவர் பத்மபூஷன் விருது வாங்கியவர். கடந்த 40 வருட காலமாக முன்னணியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நடனக் கலைஞர் மற்றும் கோரியோ கிராஃபர் ஆவார். 'தர்ப்பணா' நாட்டியப் பள்ளியில் டைரக்டராக அநேக ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். சமூக கல்வி ஆர்வலர். பெண்களுக்காக குரல் கொடுப்பவர். கடந்த 18 மாதங்களாக, Webinar, பேட்டி மூலம் மக்களுக்கு ஊக்கமும், புத்துணர்ச்சியம் கொடுத்து வருகிறார்.
சங்கீத கலாநிதி டாக்டர் S. செளம்யா
இவரை இசையில் விதூஷி மற்றும் வீணை வாசிப்பதில் சரஸ்வதி என்று சொல்லலாம். மிருதங்கத்தின் பண்புகள் பற்றி ஆராய்ச்சி செய்து, Ph.D பட்டத்தை மெட்ராஸ் பல்கலைக் கழகம் மூலம் பெற்றவர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கர்நாடக இசையைப் பரப்பி வருபவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்வுகளில் நடுவராக செயல்படுபவர். தனது 'சுக்ர்தம்' (Sukrtam) ஃபெளண்டேஷன் வழியாக இளம் இசைக் கலைஞர்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
டாக்டர் ஜெஸ்ஸி தோமஸ் (Director Genl. Aeronautical Systems)
ஏவுகணை வழிகாட்டுதலில் Ph.D பட்டம் வாங்கியவர். அக்னி ஏவுகனண நிகழ்வின் ஆரம்பத்திலிருந்து இணைந்து
செயல்பட்டவர். இவர் அமைத்துள்ள
வழிகாட்டும் திட்டம், நீண்ட தூர
ஏவுகணைகள் செயல்பட
வழி வகுத்துள்ளது. அநேக டாக்டரேட் பட்டங்களும், பாரத் ரத்னா போன்ற
விருதுகளும் பெற்றவர். அக்னி புத்ரி,
Missile Woman என எல்லோராலும் அழைக்கப்படுபவர்.
டாக்டர் கமலா செல்வராஜ் (மகப்பேறு மருத்துவர்)
MS அஷீ சுயாஷ் (Ashu Suyash ) (Independent Director)
CA பட்டம் பெற்ற இவர் இந்திய
பொருளாதார சேவைகளில் 33 வருட
அனுபவம் உள்ளவர். ஹிந்துஸ்தான்
யூஜிலிவர் லிமிடெட்
கம்பெனியின் தொழில் முனைவராக
பணியாற்றி வருகிறார்.
CRISILஇன் முன்னாள் MD & CEO ஆவார்.
MS நித்யா ஈஸ்வரன் (MD – Multiples Alternate Asset Management Pvt. Ltd)
14 வருட காலம் City Bank, ICICI ஆகிய வங்கிகளில பணிபுரிந்து, தற்சமயம் Multiplesஇல் MDஆக உள்ளார். நிதி குறித்த சேவைகளில் 25 வருட அனுபவம் உடையவர். இக்கம்பெனியை மேலும் மேலும் முன்னேற்ற உழைத்து வருபவர். முதுகலை பட்டதாரியாகிய இவர், வார இறுதி நாட்களில் வசதியற்ற குழந்தைகளுக்கு கணிதம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இந்த மாபெரும் விழாவிற்கு தொழிலதிபர் டாக்டர் சுஜாதா சேஷாத்ரிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களை கௌரவித்தார். இந்த நவரத்தினங்களாகிய 9 பெண்மணிகளுக்கும் FAS சேர்மன் திரு G.G. பரதன், சேர்மன் திரு. R. ராதா கிருஷ்ணன், பிரசிடெண்ட் திருமதி ராதிகா அனந்தகுமார் மூவரும் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கினர்.
விருது வழங்கலைத் தொடர்ந்து, ஶ்ரீகலா பரத் மற்றும் தேஜஸ் (சென்னை) குழுவினரின் 'மஹிளா மஹிமா' பரதநாட்டியம் பலே சிறப்பாக நடைபெற்றது.