
"நம் மன்னர் புத்திசாலி என்று எதை வைத்துச் சொல்கிறாய்?"
"காலியாய் இருக்கும் கஜானாவை வங்கி பெட்டகமாய் வாடகைக்கு விடுகிறாரே!"
……………………………………………
"தண்டோராபோடுபவனுக்கு சம்பள பாக்கி வைத்தது தப்பாய்போயிற்று!"
"ஏன் என்ன செய்தான்?"
"தண்டோராவுக்குப் பதில் போர் முரசை தட்டிவிட்டான்!"
……………………………………………
"தலைவருக்கு கொரோனாவாமே… என்னசெஞ்சாரு?"
"தொண்டர்கள் யாருமே வராத கட்சி ஆபிஸ்ல தன்னைத் தனிமை படுத்திக்கிட்டாராம்!"
……………………………………………
"நம் மன்னரை இனிமேல் சக்கரவர்த்தி என்று அழைக்கவேண்டும் என்று கூறுகிறார்களே… ஏன்?"
"நம் மன்னருக்கு சக்கரை வியாதி வந்துவிட்டதாம்!"
……………………………………………
"மன்னா இளவரசன் உங்களைப் போலவே இருக்கிறான்!"
"எதை வைத்து சொல்கிறாய் ராணி?"
"நீங்கள் போர்க்களம் போக அழுவதுபோல் அவன் குருகுலம் போக அழுகிறான்."
……………………………………………
"என் வீட்டுல என் கணவர்தான் சமைப்பார்!"
"ஓ குக் வித் கோமாளியா?"
……………………………………………
"அமைச்சரே நம் நிதிநிலை அறிக்கையை வாசியுங்கள்!"
"கஜானா காலி! கஜானா காலி! கஜானா காலி!"