-பத்மினி பட்டாபிராமன்.கடந்த திங்கள் நம் 75வது சுதந்திரதினம், தேசியமும் தெய்வீகமும் சங்கமித்தத் திருநாளாக எங்களுக்கு அமைந்தது… ஆம்… அன்று நாங்கள் சிறுதாமூர் என்ற கிராமத்துக்குச் சென்று அவர்களுடன் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினோம். சென்னையிலிருந்து 110 கிமீ தூரத்தில், செங்கற்பட்டு மாவட்டத்தில், திண்டிவனத்திற்கு அருகில் உள்ள கிராமம் சிறுதாமூர். வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு இங்கே உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாக, எல்லோரும் தினமும் கிராமத்தின் நடுவில் ஒரே இடத்தில் ஒன்று கூடி தேசியக் கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடி தேசத்தை வணங்குகிறார்கள்… எத்தனை அருமை..!.இங்கே அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியாக 1959 ம் ஆண்டு சேஷாத்ரி ஐயங்காரால் துவக்கப்பட்ட பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரைதான் வகுப்புக்கள் உள்ளன. சுமார் 82 மாணவர்கள் படிக்கிறார்கள். தினமும் தேசியக் கொடியேற்றி வணங்கும் இந்தக் கிராம மக்கள், சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும், இராணுவ வீரர்களையும், கிராம துப்புரவுப் பணியாளர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் பாராட்டி வருகின்றார்கள் என்றால் இவர்களின் தேசப்பற்றை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா?.எனவே, இந்தக் கிராமத்திற்குச் சென்று, அவர்களோடும் அந்தப் பள்ளி மாணவர்களோடும், நம் சுதந்திர தின பவள விழாவைக் கொண்டாடுவது என்று தீர்மானித்து, உரத்தசிந்தனை அமைப்பின் உறுப்பினர்கள், நண்பர்கள் என்று 21 பேர் ஒரு வேனில் சென்றோம். எங்களை அன்புடன் வரவேற்ற திரு.விஜய் கிருஷ்ணன், அவரது துணைவி திருமதி சாந்தி, மற்றும் தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள், பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர், மாணவர்கள் அனைவரின் முகத்திலும் உற்சாகம்..விஜயகிருஷ்ணன், சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர், வளர் கிராமப் பணியாளர், மற்றும் சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியின் பகுதி நேரச் செய்தி வாசிப்பாளர். அவர், கிராம முக்கியஸ்தர்களுடன் இணைந்து ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். சட்டையில் குத்திக் கொள்ள, அனைவருக்கும் தேசியக் கொடி வழங்கப்பட்டது..நாங்கள், பள்ளி வளாகத்தில் நுழைந்தபோது, பத்து வயதுக்குப்பட்ட மாணவர்கள், மைக் பிடித்து, நம் நாட்டின் பெருமைகளை அருமையாக பேசிக்கொண்டிருந்தார்கள்..அவர்களைப் பாராட்டிவிட்டு கொடியேற்றினோம். எங்களுடன், கிராம மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும், வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுப்பண் பாட, அந்த இடம் முழுவதும் தேசியம் ஓங்கி ஒலித்தது. பின்னர் அதற்கு அடுத்தாற் போலிருந்த சேவை மையத்தில் ஊர்த் தலைவர் கொடியேற்றினார். ..அன்றைய தினம் ராணுவ வீரர்களுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது..நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான, திரு.கிள்ளி வளவன், 'தியாகம் போற்றுவோம்' என்ற அமைப்பை நிறுவி, தமிழ்நாட்டில் நானூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று, நம் நாட்டில் நடந்த போர்கள், எல்லைப் பாதுகாப்புவீரர்கள், ராணுவ வீரர்களின் தியாகம் இவற்றைப் பற்றி எடுத்துரைத்து வருகிறார்..தவிரவும், நாட்டைக் காக்க நல்லுயிர் ஈந்தவர்கள் பற்றிய தியாக வரலாற்றைப் புத்தகம் எழுதி, அச்சிட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கி வருகின்றார். சிறுதாமூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பயிலும் 1200 மாணவர்களுக்குச் சுதந்திரத் திருநாளன்று இப்புத்தகம் வழங்கப்பட்டது. தேசப்பற்றை இளம் வயதிலேயே விதைக்க வேண்டிப் பணியாற்றி வரும் இவருக்கும் அன்று சல்யூட் செய்தோம்..இது வரை கொரோனா வராத சுத்தமான இந்தக் கிராமத்தை சுத்தப் படுத்தும் துப்புரவுப் பணியாளர்களை வணங்கி, சால்வை போர்த்தி அவர்களை எதிரே நிற்கச் சொல்லி, சல்யூட் செய்தோம். மனசு நிறைந்து போயிற்று..இருந்தாலும் இந்தப் பள்ளி இன்னும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் வளராமல், பல வருடங்கள் அப்படியே இருப்பதாகவும், பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்பு படிக்க வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும், கிராம மக்கள் ஆதங்கப் படுகிறர்கள். பல வருடங்களாக அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்..ஆன்மீக அனுபவம்.தேசிய உணர்வில் நெஞ்சம் நிறைந்திருக்க, விஜயகிருஷ்ணன் எங்களை வெற்றி வழங்கும் பெருமாள் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார். சுத்தமாக, கிரானைட் தரையோடு கோயில் புதுமையாகக் காட்சி அளித்தாலும், சுவாமி, 1000 ஆண்டுகள் வரலாறு கொண்டவர். திருப்பதிக்கும் ஸ்ரீரங்கத்திற்கும் பூகோள ரீதியாக மிகச்சரியாக நடுவில் அமைந்த கோயில் இது..ஏழை விவசாயி ஒருவர், ஏழுமலை சென்று பெருமாளைத் தரிசனம் செய்ய முடியவில்லையே என தினமும் மண்ணில் அங்கப் பிரதட்சிணம் செய்து ஏங்கினாராம். பெருமாளே அவரது காதில் 'நானே இங்கே உன்னைப் பார்க்க வருகிறேன்' என்று சொல்லி, விவசாயி கையில் வைத்திருந்த விதை நெல்லைத் தூவி விதைக்குமாறு சொன்னாராம். விவசாயம் செழித்தது. எனவே விவசாயிகளுக்கான பெருமாள் இவர் என்ற ஒரு புராணக் கதை உண்டு,.தவிர ஒரு வரலாற்று சம்பவமும் உண்டு. கி.பி.700 முதல் கி.பி.728 வரை ஆட்சி புரிந்தவர் ராஜ சிம்மன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன். கடல்மல்லையில் (மகாபலிபுரம்) தொடர்ந்து பெருந்தொல்லை தந்த கொள்ளைக்காரர்களை ஒழிக்க காஞ்சியிலிருந்து பல்லவ மன்னனை ஏற்றிக்கொண்டு அவரது ரதம் புறப்பட்டது. ரதத்தை கீழ்த் திசையில் செலுத்தியபோது குதிரைகள் அந்தத் திசையில் செல்லாமல், தென்திசையில் பயணிக்க, சேனாதிபதி குதிரைகளைத் திருப்ப பலமுறை முயற்சித்தான். மன்னர், அவற்றின் போக்கிலேயே ரதத்தைச் செலுத்தச் சொன்னார்..பல காத தூரம் கடந்தபின் தாமரை மலர்கள் பூத்திருந்த ஒரு காயாத குளத்தில் (தற்போது காயாங்குளம்) குதிரைகள் நின்றுவிட்டன. அவற்றை நீர் அருந்த வைத்து, மீண்டும் பயணித்த போது, இம்முறையும் அவை மீண்டும் தென் திசையிலேயே சென்றன. சற்று தூரம் சென்றதும், அவை ஓரிடத்தில் முன்னங்கால்களை மடக்கி மண்டியிட, கீழிறங்கிய மன்னர் எதிரே ஸ்ரீனிவாசர் விக்ரகம் இருப்பதைக் கண்டு பரவசம் அடைந்து, வணங்கினார். பின்னர் பயணத்தை, கடல் மல்லை நோக்கித் தொடர்ந்த போது, குதிரைகள் திரும்பி, சரியான பாதையில் பறந்தன. கொள்ளையர்கள் தோற்றுப்போய் ஓட, வெற்றி பெற்றார் பல்லவ மன்னர். அதனால், இந்தப் பெருமாள், 'வெற்றி வழங்கும் பெருமாள்' என்று போற்றி வணங்கப் படுகிறார். பின்னர் ராஜ சிம்மன் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார்..ஒன்பதாம் நூற்றாண்டில் கடைசி பல்லவ மன்னன் அபராஜிதவர்ம பல்லவன், கி.பி. 987ல் பாண்டியர்களைப் போரில் வென்று இந்தப் பெருமாளை வந்து வணங்கினாராம்..இன்றும் அந்தக் குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதாகக் குறிப்பிடுகிறார்கள். ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார் சன்னிதி தனியாக உள்ளது.மற்றும் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ தேசிகர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் ஆகியோருக்கான சன்னிதிகள், ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளையின் பணிகளால், புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன. பெருமாளின் பிரசாதம் உண்டு கிளம்பியபோது, மனமும் வயிறும் நிறைந்து அன்றைய தினமே மிகவும் அர்த்தமுள்ளதானது.