
தேவையான பொருட்கள்:
1. Finearts canvas board
2. Fevicryl mouldit
3. Fevicryl Acrylic color – கருப்பு
4. Fevicryl pearl metallic – தங்க நிறம்
5. பெயிண்ட் ப்ரஷ்
6.துணி பசை
7. நிஜ இலைகள்
செய்முறை :
1. முதலில் fevicryl mouldit எடுத்து அதில் இருக்கும் இரண்டு பகுதிகளை நன்றாக வெள்ளை நிறம் வரும் வரை பிசையவும்.
2. நன்றாக பிசைந்த mouldit ஐ மெல்லிசாக உருட்டி தேய்த்து எடுக்கவும். பின் அதன் மேல் ஒரு இலையை வைத்து நன்றாக அழுத்தவும்.
3. நன்றாக அழுத்திய பின் இலைப் பகுதியை விட்டு மற்ற பகுதியை வெட்டி எடுக்கவும்.
4. இப்பொழுது மெதுவாக mouldit இலிருந்து இலையை எடுக்கவும். எடுத்த பின் இலையைப் போல் mouldit இருக்கும்.
5. இதைப்போல் நிறைய இலைகள் செய்யவும். வேறுவேறு அளவிலும் செய்யலாம்.
6. இப்பொழுது கேன்வாஸ் போர்டு மீது மரக்குச்சிகள் ஆக mouldit i உருட்டி வைத்து ஒட்டவும்.
7. மரக் குச்சிகள் மேல், செய்த இலைகளை ஒவ்வொன்றாக வைத்து ஒட்டவும். (படம் 8)
8. mouldit நன்றாக காய்ந்தபின் அக்ரிலிக் black பெயிண்ட் முழுவதும் பிரஷ் வைத்து வண்ணமிடவும்.
9. Black கலர் காய்ந்த பின் pearl metallic gold கலர் வைத்து இலைகள் மேல் வண்ணம் இடவம் .
10. இப்பொழுது அழகான தங்க நிற leaf mural தயார். எந்த இலைகள் வேண்டுமானாலும் நாம் எடுத்து செய்யலாம்.