ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ண்டவன் ஒரு நாள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பைத் துவங்கினார். அதற்கு, 'உலகம்' என்று அழகான பெயரையும் சூட்டினார்.

முதலில் பஞ்ச பூதங்களைச் சேர்த்தார். ஆகாயம், பூமியைச் சேர்த்ததும், சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் ரிக்வெஸ்ட் கொடுத்துச் சேர்ந்தனர்.
நம்ப கடவுள்தான் ரசனைக்காரர் ஆச்சே! அடுத்ததா, கடல், மலை, நதி, அருவி, தாவரம், விலங்கு, பிராணி, பறவை, பூச்சி என வரிசையாகச் சேர்த்து மகிழ்ந்தார்.

மிக அழகான உலகம் உருவானதும் என்ன தோன்றியதோ, மனிதனையும் குரூப்பில் சேர்த்தார். மனிதன் புத்திசாலியாக இருக்கவே, கடவுளுக்கு அவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

''இனி, இந்த குரூப்பை இவன் நல்லபடியாக நடத்திச் செல்வான்" என்று எண்ணி மனிதனை, 'குரூப் அட்மின்' ஆக்கிவிட்டு அவர், 'left' ஆகி விட்டார்.
கொஞ்ச நாள் பொறுப்பாகச் செயல்பட்ட மனிதன், காலப்போக்கில் சுயநலம் ஆகிவிட்டான். தன் இஷ்டத்துக்கு ஆட ஆரம்பித்தான்.


மரம், நதி, குளம், இவற்றை ரிமூவ் செய்து விட்டு, தொழிற்சாலை, மால், அபார்ட்மெண்ட், தார் சாலை போன்றவற்றை, 'add' செய்தான்.

இதனால் கோபம் கொண்ட மழை, ''என் அன்புக்கு உரியவர்கள் இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை?" என்று அதுவும், 'left' ஆனது.

ஆனால், சூரியன் left ஆகாமல், குரூப்பில் இருந்துகொண்டே தனது சினத்தை மனிதன் மீது காட்டிக்கொண்டே இருக்கிறான்.

இந்தக் கதை கற்பனைதான். ஆனால் எங்கேயோ, 'சுரீர்' ன்னு உரைக்குதில்லே. எனக்கும்தான்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com