
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?
Amazing information… every story of HIS is like a blessing.
– ஆதித்யா
மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்த பலரும், மஹாகவி பாரதியாரின் எள்ளுப் பேரனுடைய இந்தக் கட்டுரைத் தொடரைப் படிப்பதன் மூலம் உலகப் பெருங்கவிஞரான பாரதியின் சிந்தனை வீச்சின் விஸ்வரூபத்தை அறிந்துகொள்ளலாம்.
சக்கரவர்த்தினி கட்டுரையில், 'கலியுகத்தில் மட்டுமே பெண்கள் கல்வி கற்கத் தடை' என்று எழுதியதுதான் எவ்வளவு பொருத்தம்?!
கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரியும் வைரம். ஒவ்வொரு படமும் மாணிக்கம். பாரதியின் நினைவு நூற்றாண்டு மலராக வெளியிடப்பட வேண்டும். பாரதிக்கு செய்யும் அஞ்சலியாக பாரதியின் வழித்தோன்றலைக் கொண்டு தென்றலெனத் தொடர் எழுதச் செய்யும் கல்கி குழுமத்திற்குப் பாராட்டுகள்.
– வெங்கடேஷ் வெங்கட்.
'எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்' இரண்டாம் பாகம் மிகச் சிறப்பு. நிறைய செய்திகளை பதிவு செய்துள்ளார் நிரஞ்சன்பாரதி. '1901ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட பெண்கள் கல்வி கணக்கெடுப்பு விவரத்தைச் சக்கரவர்த்தினியில் அவர் பதிப்பித்தார். அதில், 10,000 பெண்களுக்கு 94 பெண்கள்தான் படித்தவர்களாய் இருக்கிறார்கள்…' இப்படி ஏராளமான செய்திகளுடன் புதுமை பெண் தொடரை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறார் கட்டுரை ஆசிரியர்.
– ஆறுமுகப்பாண்டி
கட்டுரையின் ஆரம்பத்திலேயே இதயத்திற்குத் தேவையான ரகசியத்தைக் கூறி, அதற்கு எடுத்துக்காட்டாக பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கியுள்ளீர்… மிகச் சிறப்பான ஆரம்பம்.
– சதீஷ் தமிழ்
கட்டுரை அற்புதம்.
– கே.எஸ்.கிருஷ்ணவேணி
அரிய பல தகவல்களுடன் அமைந்த விறுவிறுப்பான எழுத்து நடை. பெண் கல்வி குறித்த செய்திகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. கட்டுரை சிறக்க வேண்டும் என்று விரும்பி இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உழைப்பது கட்டுரையில் மிளிர்கிறது. வாழ்த்துக்கள் நிரஞ்சன் பாரதி.
– இசக்கிசெல்வி சுபாஷ்
வேர்களைத் தேடி
இளம் வயதிலேயே நம் பாரம்பரியத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் இவ்விரு இளம்பெண்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!
– ஸ்வேதாரண்யம்
கொட்டிக் கிடக்குது வாய்ப்பு
வருமானம் ஈட்டும் ஏகப்பட்ட வழிகளை மிக அருமையாகக் கூறியிருப்பது மிகவும்மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு வார்த்தை!
குருவி தான் வாழும் காட்டையே தனது வீடாக எண்ணி தன் கடமையைச் சிறப்பாகச் செய்ததால் தேவதையின் உள்ளமே கனிந்தது. அதுபோல், நாமும் நம் கடமையை சிறப்பாகச் செய்ய நம்மைத் தூண்டுகிறது ஆசிரியரின், 'ஒருவார்த்தை.'
– கலைமதி
ஒரு வார்த்தை, கடமையைச் சரியாகச் செய்தால் நன்மை தானாகக் கிட்டும். அருமையான கதை!
– ஆர்.ஜெயலக்ஷ்மி
கோலங்கள் இல்லாத மார்கழியா?
கட்டுரையும், கோலங்களும் மனதைப் பரவசப்படுத்தின. கோலம் போடாதவர்களையும் போட வைக்கும்.
– ஜானு
கோலத்தின் அருமையைப் புரியவைத்த அருமையான கட்டுரை!
– பி.கவிதா பாலாஜிகணேஷ்
'மார்கழி மகிமை' மனதைக் குளிரவைக்கும் அற்புதமான ஆன்மிகக் கருத்துப் பெட்டகம். படிக்கப் படிக்க பக்தியின் சுவையினை பருகலாம். வாழ்த்துகள்!
பழ வியாபாரி வேலாயி கஷ்டத்தை அறிந்த அடுத்த கணமே, பத்மா மாமி மனமருகி கைகூப்பி அவளுக்கு வணக்கம் செய்தாள். இத்தகைய சூழலில், 'ஏகாதசி' அருமையான கதை எனலாம்.
இந்த வாரம் அதிகமான ஜோக்குகளை இடம்பெறச் செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த மங்கையர் மலருக்கு வாழ்த்துகள்.
அமர்க்களமாக அனைவர் கவனத்தையம் ஈர்த்து ஆருத்ரா தரிசனம் மூலம் மனதில் மகிழ்வினை அருளச் செய்த மங்கையர் மலருக்கு பல்லாண்டு பல கோடி வாழ்த்துக்கள்.
– து.சேரன், ஆலங்குளம்
ஆருத்ரா தரிசனம் தகவல்கள் அனைத்தும் அருமை. கட்டுரையாளருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
– ஆர்.ஜெயலட்சுமி
ஜோக்ஸ்
மங்கையர் மலரில் வந்த ஜோக்ஸ் ஒவ்வொன்றும் மிகவும் அருமை. எட்டு விதமான ஜோக்குகளைப் பிரசுரித்து எங்களை சிரிக்க வைத்த வாசகிக்குப் பாராட்டுக்கள். எட்டு ஜோக்குகளையும் படித்துவிட்டு வயிறு வலித்ததால், விட்டு விட்டு சிரித்தேன்.
– உஷா முத்துராமன், திருநகர்
சிறுகதை
'ஏகாதசி' சிறுகதை மனதை நெகிழ வைத்தது. பத்மா மாமி, வேலாயி என்ற இருவரின் யதார்த்தமான உரையாடலில் பல உண்மைகள் பொதிந்துள்ளன. பணம் இருப்பவர்கள் ஏகாதசி என்று சொல்லிக்கொண்டு மாதத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள். பணம் இல்லாதவர்களுக்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் பாதி நாள் ஏகாதசிதான். அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்!
– நந்தினி கிருஷ்ணன், மதுரை
'மழைக்குப் பிறகு எப்படி இருக்குது உங்க ஏரியா?' என்ற அன்புவட்டம் கேள்விக்கு அனுஷாவின் நகைச்சுவை ததும்பும் பதில் ரசிக்க வைத்தது. எந்த ஒரு நிலைமையையும் இப்படித்தான் சமாளிக்க வேண்டும் என்று ஒரே வரியில் உணர்த்திய அனுஷாவிற்கு பாராட்டுக்கள்!
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை
'காதல் முகவரி' தொடர்கதையின் காதல் நீட்சி கவிதை வரிகள் மனதை நிறைத்தது. வாழ்க்கைத் தத்துவத்தை மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டிய இந்தத் தொடர் முடிந்து விட்டதே என்று எண்ண வைத்தது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் கண்டிப்பாகத் தீர்வு இல்லை என்பதை ஆணித்தரமாகச் சொன்ன கதாசிரியருக்குப் பாராட்டுக்கள்.
– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை