கதைகள்: கே.என்.சுவாமிநாதன்.ஓவியங்கள்:சேகர்.தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற திவாகர், விபத்தில் சிக்கி, தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டான். திவாகரின் சுற்றமும், நட்பும் என்று நலம் விரும்பிகள் நிறைய குழுமியிருந்தனர்..தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியில் வந்த மருத்துவர், திவாகர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், ஆனால் உடனடியாக மூளை மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட மூளை பொருத்துவதா அல்லது பெண்ணிடமிருந்து பெறப்பட்ட மூளை பொருத்துவதா என்பதைப் பெற்றோர் முடிவு செய்து சொல்ல வேண்டும் என்றார்..என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு, ஆண் மூளை கொள்முதல் செய்ய ஐந்து லட்சம் செலவாகும் என்றும், பெண் மூளை இரண்டு லட்சத்திற்கு கிடைக்கும் என்றும் விவரித்தார். பெண்கள் தலை குனிய, ஆண்கள் "நாம் என்றுமே தலையானவர்கள்" என்ற இறுமாப்புடன் பார்த்தார்கள்..ஆவலை அடக்க முடியாத ஓர் இளைஞன் கேட்டான்."விலையில் ஏன் இத்தனை வித்தியாசம்".மருத்துவர் அந்த இளைஞனிடம் கேட்டார் " சார், நீங்கள் பழைய நான்கு சக்கர வாகனம் வாங்கச் செல்கிறீர்கள். நீங்கள் பார்த்த காரில் ஒன்று மூன்று வருடத்தில் இருபத்தையாயிரம் கிலோ மீட்டர் தூரம் ஓடியிருக்கிறது. மற்றொன்று மூன்று வருடத்தில் மூன்று லட்சம் கிலோ மீட்டர் சென்றிருக்கிறது. எதற்கு அதிக விலை கொடுப்பீர்கள்? ஏன்? என்று கேட்டார்..அந்த இளைஞன் சொன்னான் "நிச்சயமாக குறைந்த தூரம் ஓடிய காருக்குத் தான் அதிக விலை கொடுப்பேன். வண்டியின் பாகங்கள் அதிக உபயோகம் செய்யாததால் புதியது போல இருக்கும்"."அதாவது நன்கு உபயோகப்படுத்திய பொருளுக்கு விலை குறைவு. அதிகம் உபயோகம் செய்யாமல் புதியது போல இருப்பதின் விலை அதிகம் இல்லையா" என்றார்..யாருடைய தலை தாழ்ந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?.……………………………………..பகட்டில் மயங்கும் அறிவு!.வீட்டின் வரவேற்பு அறையை அலங்கரிக்க வண்ணத்தில் ராதை, கண்ணன் பொம்மை வேண்டும் என்பது விமலாவின் நெடுநாளைய ஆசை. அருகிலிருந்த "காளிதாசன் பொம்மைகள்" கடைக்குச் சென்றாள் கணவன் திவாகருடன்..அவர்கள் எதிர்பார்த்த வண்ணத்தில் அழகிய பொம்மை இருந்தது. கடைக்காரர் எண்ணூறு ரூபாய் விலை சொல்ல, ஐநூறு ரூபாய்க்குக் கேட்டாள் விமலா. நூறு ரூபாய் குறைத்துத் தருகிறேன். அதற்கு மேல் முடியாது என்று மறுத்து விட்டார் கடைக்காரர்..'"இந்த கடை பேர் மாடர்ன் ஆக இல்லை. கடையும் அலங்காரமா இல்லை.. 'ஹேமா ஆர்ட் காலரி' போவோம். அங்கு தரமான பொம்மை நியாயமான விலையில் கிடைக்கும்.." என்றாள் விமலா..'ஹேமா ஆர்ட் காலரி' வண்ண விளக்குகளுடன் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. அங்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் ராதை கண்ணன் வண்ண பொம்மை இருந்தது. திவாகர் கண்ணிற்கு பொம்மை முந்தைய கடையில் பார்த்ததைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. விமலா ஒத்துக் கொள்ளவில்லை. பேரம் இல்லாததால் சொன்ன விலை கொடுத்து வாங்கி வந்தார்கள்..வீட்டு வரவேற்பு அறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடித் தட்டின் மீது வைக்கலாம் என்று விமலா பொம்மையைக் கையில் எடுத்தாள். பொம்மையின் அடிப்பாகத்தில் கடையின் முத்திரை போட்ட காகிதம் பிய்ந்து வருவதைப் போலிருந்தது. தொட்டவுடன் அந்தக் காகிதம் கையுடன் வந்துவிட்டது. அதன் கீழே ஒட்டப்பட்டிருந்த 'காளிதாசன் பொம்மைகள்' என்ற காகிதம் விமலாவைப் பார்த்துச் சிரித்தது.