வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Published on
செம்பின் மகிமை!

செம்பு என்ற உலோகம் பல நற்பண்புகளைக் கொண்டு மனித உடல் உறுப்புகளை  திறம்பட செயல்பட உதவுகிறது.செம்பு பாத்திரத்தில் வைக்கும் நீரானது எலும்பை உறுதி செய்யும் தன்மை கொண்டது. ரத்தசோகை வராமல் தடுக்கிறது.செம்பு  பாத்திரத்தில்  வைக்கும்  நீரைப் பருகி வர உடல் ஆரோக்கியம்,வலிமை மேம்படும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ஸ்  உள்ளது. அதனால்  புற்றுநோய்  அணுக்கள்

வர விடாமல்  பாதுகாக்கிறது.மேலும் சருமத்தில் ஏற்படும்  சுருக்கங்கள், திட்டுக்களை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை  சீராக்கி உடல் ஆரோக்கியத்தை  பெரிதும் பாதுகாக்கிறது. உடலுக்கு  குளிர்ச்சி  தந்து தேகம் பலம் பெற உதவுகிறது. செம்பு பாத்திரத்தை உபயோகித்து  ஆரோக்கியத்தை  பாதுகாப்போம்.
-மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால் 

 உங்களுக்குத் தெரியுமா? 

லகின் தலை சிறந்த கம்ப்யூட்டர் – மனித மூளை 

மிகப் பெரிய சொத்து – நம்பிக்கை 

மிகவும் கூர்மையான ஆயுதம் – நாக்கு 

பயோகமில்லாத ஒர் உணர்ச்சி – சுய பச்சாதாபம் 

மிகவும் அழகான ஆபரணம் – புன்னகை

லை சிறந்த பொக்கிஷம் – நேர்மை 

சீக்கிரம் பரவும் உணர்ச்சி – உற்சாகம் 

னதை அரித்துவிடும் உணர்ச்சி – கவலை 

ன நிறைவு தரும் செயல்   – ஈதல் 

மிகப் பெரிய இழப்பு – சுயமரியாதை   

மிகப் பெரிய ஊட்டச்சத்து – பாராட்டு 

மிகச் சிறந்த தூக்க மருந்து – மன நிம்மதி

ஜெயிக்க வேண்டிய உணர்ச்சி – பயம்  

கொடுக்க கொடுக்க குறையாதது – அன்பு 
– பானு சந்திரன், சென்னை

உஷாரு! உஷாரு! சமைக்கும்போது உஷாரு!

வயதானவங்க தனியா சமைக்கிறீங்களா? அப்ப உங்க பாதுகாப்புக்காக  இதை கடைப்பிடியுங்க…  

  • சமைக்கும்போது டெலிபோன், காலிங் பெல் அடித்தால், அடுப்பை அனைக்காமல் ஒரு போதும் நகராதீங்க.
  • வயதாகும் போது இதயம் சற்று பலவீனமாகத்தான் இருக்கும், எனவே தேங்காய் துருவுவதை தவிருங்கள். பல் பல்லாக கீறிக்கொண்டு, மிக்ஸியில் லேசாக ஓடவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
  • வயதாகும் போது, கை நடுக்கம், விரல்களில் வலுவின்மை இருப்பது சகஜம். எனவே கொதிக்கும் எண்ணெய்,பால், குழம்பு, போன்றவற்றை பாத்திரத்தில் அப்படியே விடாமல், கரண்டி மூலமாக பாத்திரத்தில் விடவும்.
  • வெந்நீர், பால் போன்றவற்றை சுட வைக்கும் போது,சின்ன பாத்திரத்தில் வைக்காமல், பிடி உள்ள, அகலமான, பாத்திரத்தை பயன்படுத்துவது நல்லது.
  • எல்லாவற்றையும் ரெடியாக வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வைப்பது நல்லது.
  • அடுப்பை ஆன் பண்ணிக் கொண்டு, லைட்டரையும் அதே சமயத்தில் கிளிக் செய்வது அதிக வயதானவர்களால் முடியாது (என் அம்மா சிரமப்படுவதை பார்த்துள்ளேன்) தீப்பெட்டி உபயோகித்தால் தீக்குச்சியை போட ஒரு சிறிய மெட்டல் டப்பாவை வைத்துக் கொள்வது நலம்.
  • வயதானவர்கள் மிக்ஸி, கத்தி, அரிவாள் மனை, போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தும் போது சற்று கவனமாக, நிதானமாக, கையாள்வது நலம்.
  • தரையில் சிறிது கூட நீர் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக கனமில்லாத டோர் மேட்டை கீழே போட்டிருந்தால், ஈரம் படும்போது அதை இழுத்துப் போட்டுக் கொள்ளலாம்.
  • சமைக்கும்போது மின்விளக்கை பகல் என்றாலும் போட்டுக் கொள்வது நல்லது .
  • எக்காரணம் கொண்டும் மின்சாதனங்களை ஈரக் கையால் தொடுவதை தவிர்க்கவேண்டும்.

மொத்தத்தில் வயதானவர்கள்  எல்லாவிதத்திலும் சற்று கவனமாக சமையலறையில் இருப்பது அவர்களுக்கு நலம்.
-தி.வள்ளி, திருநெல்வேலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com