அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on

 திருமாலின் அவதாரத்தில் ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்தவர் ஸ்ரீராமர். பல பெண்களுடன் வாழ்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணர்…ஏன் இந்த முரண்பாடு?
எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

வாரம் தவறாமல் அரை டஜன் கேள்விக்கனைகளைத் தொடுத்து எப்படியோ என்னோட லவலேச மூளையைக் கசக்கிடறீங்க கெஜா… கமிங் டு தி பாயின்ட்…

"நரகாசுரனால், அவனது அரண்மனையில் அடைக்கப்பட்டிருந்த 16,000 பெண்களை மீட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். அவர்களை அந்தப் பெண்களின் பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடவே, ஓர் அரண்மனையைக் கட்டி, அவர்களை வாழ வைத்தார் கிருஷ்ண பரமாத்மா. அது தவிர, ஸ்ரீகிருஷ்ணருக்கு 8 முதன்மை மனைவிகள், 80 குழந்தைகள்" என்கிறது புராணம்.

ஆனால், உண்மையான ஆன்மிக தியரி என்ன என்றால், அது 'சகஸ்ரசக்ரம்' என்ற உயர்ந்த ஞானத்தைப் பற்றி விளக்கம் என்கின்றனர் விவரம் அறிந்த பெரியவர்கள்.

ஆயிரம் இதழ்கள், ஒவ்வொன்றும் பதினாறு கலைகளுடன் பெருக்கிக் கணக்குப் போட்டுக்கோங்க."

வைணவ சம்பிரதாயத்தில் அனைத்து ஜீவன்களும் பெண்! கிருஷ்ணர் மட்டுமே ஆண்! அதாவது ஜகத் புருஷ்! 16,008 –என்பது அவருடைய சக்திகளைக் குறிக்கிறது.  இது நாம்ப நினைக்கிற மாதிரியான 'கல்யாணம்' இல்லை.

நரகாசுரனே, ஓர் உருவாகமாகச் சொல்லப்பட்ட அசுரன்தான்! அவனைக் கொன்றதும் அவனால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த பரிசுத்த வஸ்துக்களை எல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் விடுதலை செய்து, தன்னுடைய நிஜ சுபாவத்தில் இணைத்துக்கொள்கிறார்.

இனி, நம்ம மேட்டருக்கு வருவோம். ஸ்ரீ கிருஷ்ணஜெயந்திக்கு செஞ்ச முறுக்கு, தட்டை ரிப்பன் எல்லாம் காலியா? இல்ல… வீட்டுல இன்னும் சாம்பார் ரசம் சாதத்துக்கு அதுதான் தொட்டுக்கவா?

*****************************

முன் ஜென்ம வாசனை, மறுபிறவி இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
– மஞ்சு வாசுதேவன், பெங்களுரு

அஞ்சு வயசு குழந்தை, ராகங்களைச் சரியாகக் கண்டுபிடிக்கிறது.

பத்து வயதுசிறுவன், ஏரோப்ளேனின் எல்லா செயல்பாடுகளையும் சொல்கிறான்.

ஃபிஸிக்ஸில் எந்தக் கணக்கு கொடுத்தாலும் போடுகிறான்.

இன்னொரு குழந்தை, ஸ்கொயர்ரூட் சொல்கிறது.

கேலன்டர் பார்க்காமலேயே இருபது வருஷத்துக்கு பிந்தைய, முந்தைய தேதி, கிழமை விவரங்களை நொடியில் சொல்கிறது.

எல்லாத்தையும்விடுங்க! பிறந்த குழந்தையோ, கன்னுக்குட்டியோ, தாயின் மடி தேடி, பால் உறிஞ்சுகிறதே… அந்த அறிவைக் கொடுத்தது யார்?

முன் ஜன்மம், மறுபிறவி இவற்றை நம்பினால் கொஞ்சம் குற்றங்களும் பாவங்களும் குறையக்கூடும்! ஆம் ஐ கரெக்ட்?

*****************************

 மனிதனுக்கு நிம்மதி இல்லாமைக்கு என்ன காரணம்:?
– வேதாசங்கரன், மதுரை

மிர்தமே கிடைச்சாலும், அதைவிட சிறப்பான ஒன்று இருப்பதாக மனம் நினைப்பதுதான்!

*****************************

லக ஜூனியர் மல்யுத்தத்தில் தங்கம் வென்று சாதனப் படைத்துள்ளாரே அன்திம் பற்றி…
– என். கோமதி, நெல்லை

ர வர, நம்ம ஊர் பொண்ணுங்க, மல்யுத்தம், வாள் வீச்சு, பளு தூக்குதல் போன்ற போட்டிகளில் அதகளம் செய்யறத பார்த்தா… பாவம் பசங்க! குறிப்பா அவங்க வூட்டுக்காரங்கன்னு தோணுது. (பேன்ட் எய்ட் பாய்ஸ்!)

அன்திம் பன்ஹாலுக்கு வயசு பதினெட்டேதான். ஆனா, உலக மல்யுத்த சாம்பியல்ஷிப்பில தங்கம் ஜெயிச்சு, வரலாறு படைச்சுருக்கு!

நம்ப ஊருல எல்லாம் வரிசையா பொம்பளைக் குழந்தையா பொறந்தா,'போதும் பொண்ணு', 'வேண்டாம் பொண்ணு'னு பெயர் வைப்பாங்க… கன்னடத்துல 'சாக்கம்மா' (போதும் அம்மா!) எங்க வீட்டு வேலைகள்ல உதவி செய்றவங்க பேரு அதான். 'போதும் பொண்ணு!'

அதே மாதிரி ஹரியானால, பேர் வைக்குற பழக்கம் உண்டாம்!

கிருஷ்ணகுமாரி – பன்லால் தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 4வது பெண் குழந்தையாக அன்திம் பிறந்தார். இதற்குமேல் பெண் குழந்தைகள் வேண்டாம் என்பதற்காக அவருக்கு 'அன்திம்' (இந்தி மொழியில் 'கடைசி' என்று பொருள்) என்று பெயர் வைத்தார்களாம். ஆனால், அது கும்மாங்குத்து குஸ்தி பொண்ணா வளர்ந்து, இப்ப தங்கமங்கையாக ஜொலிச்சுருக்கு!

'கடைசி'ன்னு பேர் வைச்சாலும் 'மொதல்ல' வந்திருக்கு! போட்டுத் தாக்கும்மா அன்திம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com