பாகம் – 13.சுசீலா அரவிந்தன்ஓவியம்: பத்மவாசன்.நம் பெருநாவலரின் பதிமூன்றாம் அதிகாரம் 'அடக்கமுடைமை'. வீட்டுக்கென்று சில உடைமைகள் (அன்பு செல்வம் போன்றவை) உள்ளன. அதுபோல நாட்டுக்கும் சில உடைமைகள் உண்டு என்றும் வாழ்வுக்கென்றும் சில உடைமைகள் இருக்கின்றன என்பதையும் நம் பெருமகனார், அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை,.நாணுடைமை என பத்து அதிகாரங்களில் அழகாக பட்டியலிட்டு பதிவு செய்துள்ளார்..(இப்படி வாழ்வின் அடர் நெறிமுறைகளை கொண்டுள்ள பதிவுகளை நோக்குங்கால் குறிப்பாய் அடக்கமுடைமை அதிகாரம் சார்ந்த குறள்களைக் கடந்து செல்லும்பொழுது எனக்குள் நிழலாடும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரம்….)."மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ் செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து 'சோ' என்ற சத்தத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தன. அந்தச் சுருதிக் கிணங்க, ஒரு இளம் பிள்ளையின் இனிய குரல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடலைப் பண்ணுடன் பாடியது.."பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!".இதைக் கேட்ட வந்தியத்தேவன் கண்ணை விழித்துப் பார்த்தான். அவனுக்கெதிரே பூந்தோட்டத்தில் கொன்னை மரங்கள் சரஞ்சரமாகப் பொன் மலர்களைத் தொங்கவிட்டுக்கொண்டு காட்சியளித்தன. சேந்தன் அமுதன் ஒரு கையில் குடலையும் இன்னொரு கையில் அலக்கும் வைத்துக்கொண்டு, வாயினால் பாடிக்கொண்டே, கொன்றை மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து திருநீறு புனைந்திருந்த சேந்தன் அமுதன் சிவபக்தனாகிய மார்க்கண்டனைப் போல் தோன்றினான்.".(இப்படி புதினம் முழுவதும் சாந்தமாக உலா வரும் சேந்தன் அமுதன்தான். தான் காதலிக்கும் பெண் தன் மாமன் மகளாக இருந்தாலும் அவளின் சம்மதத்துக்காய் காத்திருந்த பொறுமையாகட்டும், எச்சூழலிலும் எந்நிலையிலும் அமைதியை கையாளும் திறனாகட்டும், "பொன்னார் மேனியனே" தேவாரப் பாடலை புதினம் முழுவதும் ஒலிக்க செய்ததாகட்டும் சேந்தன் அமுதனை தவிர வேறு யாரையும் இந்த அதிகாரத்துக்கு ஒப்புமை கூற முடியாது.)."மழவர் குலத்தில் உதித்தவரும் சிவஞான கண்டராதித்த சோழரின் வாழ்க்கைத் துணைவியுமான செம்பியன் மாதேவியை, 'ஸ்ரீ மதுராந்தகத் தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார்' என்று அவர் காலத்திய கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. .செம்பியன் மாதேவி வேறொரு பிள்ளையை வெகுகாலமாகத் தம் பிள்ளையென வளர்த்து வந்த காரணத்தினால், அந்த உண்மையை அறிந்திருந்த ஒருவர் மேற்கண்டவாறு 'உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்தவர்' என்று கல்வெட்டிலே குறிப்பிட்டார் போலும்!."இவ்விதம் செம்பியன் மாதேவி உணர்ச்சிப் பெருக்கினால் மெய் மறந்த நிலையில் இருந்தபோதிலும், அமுதன் கூறிய வார்த்தைகள் அவருடைய மனத்தில் பதிந்திருந்தன. "தாயே! என்னை 'மகனே!' என்று அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ என்று கூறினான் அல்லவா? அவ்வார்த்தைகளின் கருத்து என்ன? அமுதனுக்கு அவனைப்பெற்ற அன்னை யார் என்பது முன்னமேயே தெரியுமா? தெரிந்தும் இத்தனை காலம் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் இருந்தானா?.சற்று நேரம் வார்த்தை சொல்ல முடியாத பரவச நிலையில் இருந்த பிறகு, செம்பியன் மாதேவி தன் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, "மகனே! உனக்கு முன்னமே தெரியுமா, நான் உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற பாவி என்று? தெரிந்து என் பேரில் கோபம் கொண்டிருந்தாயா? அதனால் என்னிடம் அதைப்பற்றிக் கேளாமல் இருந்தாயா?" என்று தழுதழுத்த குரலில் கூறினார்.. அப்போது சேந்தன் அமுதன் கடல் மடை திறந்ததுபோல் பின்வருமாறு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினான்:."தாயே! நான் தங்கள் வயிற்றில் பிறந்த பாக்கியசாலி என்பதைச் சில காலமாக அறிந்திருந்தேன். உலகம் போற்றும் புண்ணியவதியாகிய தாங்கள் ஒருநாள் என்னை 'மகனே!' என்று அழைக்கவேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்துவந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக்கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்காவிட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத் தானிருந்தேன். ஆனால், இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை `அன்னை' என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து தாய் உரிமை கோர விரும்பினேன். தங்களுடைய மனங்கோணாமல் நடப்பதற்காக என் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பூங்குழலியைத் தியாகம் செய்யவும் சித்தமாய் இருந்தேன். நல்ல வேளையாக அவளும் தன்னுடைய மனத்தை மாற்றிக்கொண்டாள்.".(இப்படி செம்பியன் மாதேவி தனது தாய் என்று அறிந்தும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அரச போகங்களுக்கு ஆசைகொள்ளாமல் அமைதியாக எப்போதும்போல ஊக்கமாக தனிக்குளத்தார் கோயிலுக்கு புஷ்ப கைங்கரியம் செய்துவந்தான் சேந்தன் அமுதன் அதேசமயம்,).கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து . கற்பவை கற்று, சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்து காத்திருக்கும்..(அப்படி வழிப்பார்த்து காத்திருந்த அறம் சேந்தன் அமுதனை மதுராந்தக தேவராய் – மக்கள் போற்றும் மன்னனாய் உயர்த்தியது….சோழ நாடே எதிர்பார்த்த முடிசூட்டு விழா. மக்களின் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும். தஞ்சை கோட்டைக்கு வெளியே ஒரே ஜன சமுத்திரம். தஞ்சைக் கோட்டைக்கு உட்புறமும் புறநகரும் தேவேந்திரனின் அமராவதி நகரத்தைப்போல் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியூரில் இருந்து விருந்தாளிகள் வந்து குவிந்த வண்ணமிருந்தார்கள் .இதோ பட்டாபிஷேக மண்டபம்… மணிமகுடம் சூடும் வேளை… )."வெகு நேரம் குனிந்த தலை நிமிராமலிருந்த மதுராந்தகத் தேவர் இப்போது பொன்னியின் செல்வரை அண்ணாந்து பார்த்து ஏதோ சொல்வதற்குப் பிரயத்தனப்பட்டார். பொன்னியின் செல்வர் வந்தியத்தேவனைப் பார்த்துச் சமிக்ஞை செய்யவே அவ்வீரன் மதுராந்தகத்தேவர் பக்கத்தில் போய் நின்றுகொண்டான். அவர் காதில் மட்டும் கேட்கும்படியான மெல்லிய குரலில், "நண்பா! சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய முதல் தேவாரத்தின் முதல் அடி என்ன?" என்று கேட்டான்! இந்தச் சமயத்தில் இது என்ன கேள்வி என்ற வியப்புடன் மதுராந்தகர், "பித்தா! பிறைசூடி!' என்றார். வந்தியதேவன் கள்ளக் கோபத்துடன் "என்ன, ஐயா, என்னைப் பித்தன் என்கிறீர்? நீர் அல்லவோ பெண்பித்துப் பிடித்து அலைகிறீர்? அதோ, பாரும்! உமது தர்மபத்தினி பூங்குழலி உம்மைப் பார்த்துச் சிரிப்பதை!" என்றான். இது என்ன? இந்த நல்ல சிநேகிதன் இப்படி திடீரென்று வலுச்சண்டைக்கு வருகிறானே என்ற எண்ணத்துடன் மதுராந்தகர் பெண்மணிகள் வீற்றிருந்த இடத்தை நோக்கினார். உண்மையில், அப்போது பூங்குழலி இவர் பக்கம் பார்க்கவேயில்லை. பூங்குழலி, குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி, வானமாதேவி ஆகிய அரண்மனைப் பெண்மணிகள் யாவரும் அளவில்லாத ஆர்வம் கண்களில் ததும்பப் பொன்னியின் செல்வரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..மறுபடி மதுராந்தகர் பொன்னியின் செல்வரைப் பார்த்தபோது அவர் சோழ குலத்தின் புராதன மணிமகுடத்தை தமது கரங்களில் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.."தளபதி சின்னப் பழுவேட்டரையர் இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் என்ன? குறிப்பிட்ட வேளையில் முடிசூட்டு விழாவை நானே நடத்தி விடுகிறேன்! தந்தையே! விஜயாலய சோழர் முதல் நம் முன்னோர்கள் அணிந்து வந்த இந்த மணிமகுடத்தைத் தாங்கள் எனக்கு அளிக்க உவந்தீர்கள்.சாமந்தர்கள் தளபதிகள்,கோட்டத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் அதை அங்கீகரித்தார்கள். ஆகையால், இந்தக் கிரீடம் இப்போது என் உடைமை ஆகிவிட்டது. என் உடைமையை நான் இஷ்டம்போல் உபயோகிக்கும் உரிமையும் உண்டு அல்லவா! என்னைவிட இந்தக் கிரீடத்தை அணியத் தகுந்தவர் இங்கே ஒருவர் இருக்கிறார். அவர் என்னைவிட பிராயத்தில் மூத்தவர். இந்தச் சோழ இராஜ்யத்துக்கு என்னைவிட அதிக உரிமை அவருக்கு நிச்சயமாக இருந்த போதிலும், அவர் அதைக் கோரவில்லை. நான் முடிசூட்டிக்கொண்டு சிங்காதனத்தில் அமர்வதைப் பார்த்து மகிழச் சித்தமாக வந்திருக்கிறார். அவர் என் உயிரை ஒரு தடவை காப்பாற்றினார். என் உயிரினும் இனியவரான என் நண்பரைக் காப்பாற்றினார். இந்த சோழ குலத்துக்கு நேர்வதற்கு இருந்த பெரும் விபத்து நேரிடாமல் தடுத்தார். இப்படிப்பட்ட சிறப்பான காரியம் எதுவும் நான் இதுவரையில் இந்நாட்டுக்குச் செய்தேனில்லை. ஆகையால் இந்த மணிமகுடத்தை மகான் கண்டராதித்தரின் குமாரரும், என் சிறிய தந்தையுமான மதுராந்தகத் தேவரின் தலையில் சூட்டுகிறேன்!".இவ்விதம் பொன்னியின் செல்வர் சொல்லிக்கொண்டே சக்கரவர்த்தியின் மறுபக்கத்தில் வீற்றிருந்த மதுராந்தகரின் அருகிலே சென்று அவர் சிரஸில் கிரீடத்தை வைத்தார்."வழி பார்த்துக்காத்திருந்த அறம்…