
ஓவியம்: பிரபுராம்
"மகாராணி சற்று பருமனாகி விட்டார்…"
"இருக்கட்டும்… அதுக்காக மெய்க்காப்பாளனாக
யானைப் பாகனை நியமிப்பது சரியல்ல…!"
………………………………………..
"இது டூ இன் ஒன் ஸ்வீட்டா?"
"ஆமா… தீபாவளி அன்னிக்கி சாப்பிட்டா அல்வா!
ஒரு வாரம் கழிச்சு சாப்பிட்டா பர்ஃபி!"
……………………………………………….
"நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது!"
"இருக்கட்டும். அதற்காக படையில் உள்ள யானைகளையும் குதிரைகளையும் மன்னர் சர்க்கஸ்ஸுக்கு வாடகை விடுவது சரியல்ல!"
– நிலா, திருச்சி
………………………………………………..
"அந்தக் கட்சியில் மட்டும் பிரச்னையே வராது!"
"அப்படியா…? பரவாயில்லையே!"
"ஏன்னா… அங்கேதான் ஆளுங்க யாரும் கிடையாதே!"
– ஆர்.ரஞ்சிதா ரதிஷ், ஈரோடு
…………………………………………………..
"வாஸ்து நிபுணர் மீது வானிலை அதிகாரி
பயங்கர கடுப்புல இருக்காராம்!"
"ஏனாம்?"
"தென்மேற்கு பருவ மழையை
வடமேற்கா பெய்ய சொல்லிப் படுத்துராறாம்!"
………………………………………………..
"மாப்ள வீடு ரொம்ப உஷார் பார்டிதான்!"
"எப்படி?"
"மண்டப வாசலில் செருப்பை கண்காணிக்க
கேமரா வச்சுருக்காங்களே!"
……………………………………….
"உங்க மனைவி அடிக்கும்போது எல்லாம்
சிரிக்கிறீங்களே… ஏன்?"
"அழுதா அதுக்கும் நாலு அடி சேர்த்து அடிப்பாள்!"
– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்
………………………………………………
"சலூன் கடை ஊழியருக்கும் தலைவருக்கும்
என்ன சண்டை?"
"அந்தக் கடையில் போய் தலைவர்,
'கட்டிங்' கேட்டாராம்!"
…………………………………………………
"நம்ம தலைவர் மாதிரி யாருமே
யோசனை சொல்ல முடியாது!"
"அதுக்காக அடிக்கடி கட்சி மாற
யோசனை சொல்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்!"
– மு.நிர்மலா தேவி, திண்டுக்கல்