பூனை சகுனம்! – காரணக் கதை!

பூனை சகுனம்! – காரணக் கதை!
Published on
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

பூனை குறுக்கே சென்றால், 'அபசகுனம்' என்று சொல்லுவதற்கு பின்னால் இப்படி ஒரு காரணக் கதை இருக்காம்!

ந்தக் காலத்தில் தெரு விளக்கு கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால், மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோதான் பயணம் செய்ய வேண்டும். நீண்ட தூர பயணமாக இருந்தால் கட்டாயம் அது இரவு நேரப் பயணமாக இருக்கும். இப்படி இருட்டு சமயத்தில் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ பயணம் செய்யும்போது எதிரே வரக்கூடிய பூனை, வண்டியை ஓட்டிச் செல்பவருடைய கண்களுக்குத் தெரியாது.

பூனையின் கண்கள் மட்டும்தான் இருட்டில் தனியாகத் தெரியும். அதாவது, பொதுவாகவே பூனையின் கண்களை இருட்டில் பார்க்கும்போது ஒரு ரேடியம் எஃபெக்டில் நமக்குத் தெரியும். பூனையின் உருவம் இருட்டில் தெரியாது. ஆனால், லைட் போட்டு வைத்திருப்பது போல இரண்டு கண்களும் அப்படியே மின்னும். பூனைக்கு மட்டுமல்லாது; புலி, சிறுத்தை, சிங்கம், கருஞ்சிறுத்தைஇப்படி எல்லா வகையான காட்டு விலங்குகளுக்கும் கண்கள் இப்படித்தான் ரேடியம் மின்னுவது போலத் தெரியும். (ஆங்கிலத்தில் இந்த மிருகங்களை Big Cats என்று சொல்லுவார்கள்.) இப்படிப் பூனையின் கண்களைப் பார்த்து வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு அல்லது குதிரை பயந்து மிரண்டு விடக் கூடாது. இருட்டில் பூனையின் கண்களைப் பார்த்து, காட்டு விலங்குகள்தான் எதிரே வருகின்றது என்ற அச்சத்தில் குதிரையும் மாடும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள், பூனை எதிரே வந்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டி விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுச் செல்வார்களாம்.

தே சமயத்தில் குதிரையை ஓட்டிச் செல்பவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தண்ணீர் பருகிவிட்டு அதன் பின்பு தங்களுடைய பயணத்தைத் தொடர்வார்களாம். இந்தப் பழக்கம்தான் காலப்போக்கில் மாறி மாறி பூனை குறுக்கே வந்தால் அபசகுனம். தண்ணீர் குடித்துவிட்டு, ஓய்வு எடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்று நம்முடைய ஜனங்க மாத்தி வச்சுட்டாங்களாம்.

பூனை குறுக்கே வந்தால் அது அபசகுனம் என்று நினைத்துத் தேவையில்லாமல் உங்கள் மனதைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் குழப்பமாக செய்யும்போது அதில் பிரச்னைகள் வரத்தான் செய்யும்; பூனை குறுக்கே வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி. மனத் திருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியில் முடியும்.

வாசகர்களே! இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் பின்னணியில் இருக்கக்கூடிய காரணக் கதைகள் உங்களுக்கும் தெரிந்திருந்தால் எழுதி அனுப்பலாமே!
(-
ஆர்.)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com