ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on

படங்கள்: பிள்ளை

"நேத்து என் மனைவி மயங்கி விழுந்ததும் என்னோட பல நாள் கனவை நிறைவேத்திட்டேன் !"

"அப்படி என்ன கனவு ?"

"பளார் பளார்னு அவ கன்னத்துல அடிக்கணுங்கிறதுதான்…"

 – இரா. அருண்குமார், வாணரப்பேட்டை.

*************************************

 "உங்க மனைவிக்கு உப்புமா பண்ணத் தெரியாதா?"

 "எதற்காக கேட்கிறீங்க?"

 "உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி இன்னும் ஊருக்குப் போகாமல் இருக்காங்க!"

-எம்.இராஜேந்திரன்லால்குடி

*************************************

"தலைவரோட கட்சி ஆபீஸிலே எங்க பார்த்தாலும் பெருச்சாளி கூண்டு வெச்சிருக்காங்க ஏன்?"

"ஊழல் பெருச்சாளிகளை பிடிக்கத்தானாம்!"

-ஆர். மகாதேவன், திருநெல்வேலி

*************************************

"டாக்டர் ஆபரேஷனுக்கு முன்னால பேஷண்ட்டோட வயிற்றிலே என்ன எழுதறார்?"

"பிள்ளையார் சுழி போடறார். இந்த ஆபரேஷனாவது சக்சஸ் ஆகணும்னு"

-ஆர். மகாதேவன், திருநெல்வேலி

*************************************

"தளபதியாரே வாளை உடைச்சு கொண்டு வந்திருக்கிறீரே?"

" மன்னா நீங்கதானே உடைவாளை கொண்டு வரச் சொன்னீர்கள்."

-ஆர். மகாதேவன், திருநெல்வேலி

*************************************

"ஆராய்ச்சி மணியை வெச்சுக்கிட்டு இளவரசர் என்ன செய்யறார் அமைச்சரே?"

"ஆராய்ச்சி பண்றார். சப்தம் எப்படி வருதுன்னு மன்னா!"

-ஆர். மகாதேவன், திருநெல்வேலி

*************************************

"மாலா உன் வீட்ல ஏன்டி பீரோ முன்னால மாமியார் படத்த ஒட்டி வைச்சிருக்கே?"

"ஜோசியர் கண் திருஷ்டி படம் மாட்டச் சொன்னார்டி!

-ஆர். மகாதேவன், திருநெல்வேலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com