தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.
Updated on:
Copied
Follow Us
-சுந்தரி காந்தி, பூந்தமல்லி
ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு, நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் இப்பூவுலகை விட்டு இன்னுயிர் நீத்தார். அவரை நினைவு கொள்ளும் வகையில், அவரது பொன்மொழிகள் இதோ நமக்காக…
அமைதி மற்றும் சமாதானத்துக்காக சிந்திப்பதிலும் பேசுவதிலும், எதையேனும் செய்வதிலும் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. பாவத்தைதான் வெறுக்க வேண்டும். பாவம் செய்தவரிடம் அன்பையே செலுத்த வேண்டும்.
நான் வன்முறையை எதிர்க்கிறேன். வன்முறையால் விளைந்ததாகத் தெரியும் நன்மை தரற்காலிகமானது.
வலிமை என்பது உடல் உறுதியில் இல்லை. எந்தக் கட்டத்திலும் நிலைத்து நிற்கும் மன உறுதியில்தான் உள்ளது.
கோழை யாரையும் மன்னிப்பதில்லை. மன்னித்தல் என்பதே வீரத்தின் அடையாளம்.
உலகத்தை நீ எப்படியெல்லாம் மாற்ற நினைக்கிறாயோ, அந்த மாற்றங்கள் எல்லாம் முதலில் உனக்குள் நிகழ வேண்டும்.
வன்முறையால் கிட்டும் வெற்றி சில நொடிகளே நிலைக்க கூடியது. எனவே அது தோல்விக்கு சமமானது.
கண்ணுக்கு கண் என்று பழி தீர்த்துக் கொண்டு போனால், உலகமே குருடாகி விடும்.
கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ, அவனே சரியான குருடன்.
எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை, பிறருக்குப் கொடுப்பதில்தான் இருக்கிறது.
எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து விடலாம் ஆனால் அதை ஒரு அறிவாளியால்தான் காப்பாற்ற முடியும் .
செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு எழுதிவை, செலவழித்தது அவசியம்தானா என்று சிந்தித்துப்பார். சிக்கனம் தானாகவே வந்துவிடம் . ஒருவன் தனக்குத் தேவையற்றதை விலைக்கு வாங்கினால், அது அவன் பணத்தை அவனே திருடுவதற்கு சமமாகும் .
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை .