ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on

ஓவியம் : பிரபுராம்

"நம் மன்னர் போரிலிருந்து வருகிறாராம். நெற்றிக்கு திலகம் தயார் செய்யவா?"
"வேண்டாம். உடம்புக்குத் தைலம் தயார் செய்!"
-நிலா, திருச்சி

………………………………………………………….

"டாக்டர் தூரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் மங்கலா தெரியுது. இது எட்ட பார்வையா? கிட்ட பார்வையா?""
"கெட்ட பார்வை!"
-நிலா, திருச்சி

………………………………………………………….

"இந்த ஏரியாவுல தண்ணி நல்லா வருமா?"
"வெள்ளமே வரும்!"
-நிலா, திருச்சி

………………………………………………………….

"மன்னா! போர் பீரங்கிகளுக்கு போடும் குண்டுகள் தீர்ந்துவிட்டன!"
"கவலை வேண்டாம் மந்திரி! மகாராணி செய்திருக்கும் குலோப்ஜாமூன் உருண்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்!
-நிலா, திருச்சி

………………………………………………………….

 "பதுங்கு குழிக்குள் இருந்த நம் மன்னர் எதிரிநாட்டு மன்னனிடம் எப்படி பிடிபட்டார்?"
"மகாராணி பதுங்குகுழியை சுற்றி மார்கழி கோலம் போட்டிருந்தாராம்!"
-நிலா, திருச்சி

………………………………………………………….

"அந்த மந்திரி வீட்டுக்கு ஏன் திருட போக வேணாம்னு சொல்ற?"
"நேத்துதான் அவர் வீட்டுக்கு ரெய்டு வந்தாங்க!"
-நிலா, திருச்சி

………………………………………………………….

"மந்திரி ஏன் சார் இவ்வளவு பெரிய மரத்தை நடறாரு?"
"மரம் நடு விழான்னு அறிவிச்சுட்டு செடியை நடமாட்டாராம்!
-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி

………………………………………………………….

 "நீங்க தொடர்ந்து நாலு வாரம் ரெஸ்ட்ல இருக்கணும்."
"அது முடியாதே டாக்டர்! ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் கிடையாதே?"
-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி

………………………………………………………….

"டாக்டர் உங்க தெர்மாமீட்டர் மிகவும் சக்தி வாய்ந்தது!"
"எப்படி?"
"என் மனைவியின் வாயை மூட வைத்து விட்டதே?"
-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com