முத்துகள் மூன்று

முத்துகள் மூன்று
Published on
மகளிர் சிறப்பு
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

மொபைல் மூலம் திருடனைப் பிடித்த பெண்

வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த திருடனை, மொபைல் போனில் உள்ள வசதியை பயன்படுத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார் ஒரு பெண். கேரளாவில் கோட்டயம் மாவட்டம் கீழுரில் வசிப்பவர்கள் மேத்யூ தம்பதியினர் இவர்களது மகள் மகள் சோனியா, 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கன்னூர் மாவட்ட்த்தில் வசித்து வருகிறார்.

தன் பெற்றோர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தன் மொபைல் போனில் பார்க்கும் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளார்.

சென்ற வாரம் ஒரு நாள் இரவு தன் பெற்றோரின் வீட்டு மாடிப்படியில் மர்ம நபர் ஒருவர் ஏறிச் செல்வதை மொபைலில் இணைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த சோனியா அதிர்ச்சியடைந்தார்.

திருடன் இரண்டு கேமராக்களை மூடி விட்டு மூன்றவத் கேமராவையும் மூட முய்ற்சி செய்திருக்கிறான். இதை கணட சோனிய, பெற்றோர் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவரை மொபைலில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் வருவதைப் பார்த்த திருடன் மாடியில் இருந்து குதித்து தப்பியோடினார். போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
வயதானவர்கள் தனியாக இருப்பதை அறிந்து வீட்டு கதவை உடைத்து திருட பாபின்ஸ் என்னும் அந்த நபர் முயற்சித்தது விசாரணையில் தெரிந்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட சோனியாவுக்கு பாராட்டு குவிகிறது.

19 வயதில் உலக சாதனை

19 வயதில் தன்னந்தனியாக ஒரு விமானத்தில் உலகைச் சுற்றி வந்திருக்கிறார் பெல்ஜியத்தைச் சேர்ந்த சாரா ரூதர்ஃபோர்ட் (Zara Rutherford) என்ற இளம் பெண். ஐந்து கண்டங்களில் 52,000 கிலோமீட்டர் பயணித்து,ஆங்காங்கே 41 நாடுகளில் விமானத்தை நிறுத்தி, பின்னர் உலகைச் சுற்றிப் பறந்தவர், சென்ற ஜனவரி மாதம் 18ம் தேதியன்று தன் மைக்ரோலைட் (Shark UL Microlight) விமானத்தில் கிளம்பிய சாரா,155 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, பெல்ஜியம் விமான தளத்தில் இறங்கினார்.

மைக்ரோலைட் விமானத்தில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண், தனியாக பயணம் செய்த பெல்ஜியம் நாட்டின் முதல் பெண் என இரண்டு உலகச் சாதனைகள் மூலம் கின்னஸ் (Guinness) புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் சாரா.

திட்டமிட்டதற்கு மாறாக இரண்டு மாதங்கள் நீண்டு விட்ட இந்தப் பயணத்தில் சாரா சந்தித்த சவால்கள் ஏராளம். நீண்ட சமுத்திரங்கள், மோசமான வானிலை, விசா பிரச்னைகள், கலிஃபோர்னியாவின் காட்டுத்தீ என்று பலவற்றை எதிர்கொண்டிருக்கிறார்.
"காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை பார்வையையே மறைத்தது. மேலே பறக்க முயன்றேன் ஆனால் முடிய வில்லை விமானம் மிகவும் ஆடியது." என்கிறார்.

பூமத்தியரேகைக்கு அருகே பறந்த போது,குவிந்த பெரும் மேகங்களும் திடீர் புயல்களும் விமானத்தைத் தாக்கின கடுங்குளிர் காரணமாக சைபீரியாவில் ஒரு சிறு கிராமத்தில் பல வாரங்கள் தங்க வேண்டியிருந்தது.

சிங்கப்பூரில், விமானம் கிட்டத்தட்ட மின்னல் தாக்குதலுக்கு உட்பட்டது. அதையும் சமாளித்திருக்கிறார். வட கொரியாவின் வான் வழியில் அனுமதி இல்லாததால் தவிர்த்துச் சென்றார்.

அசாத்திய பொறுமை, அதிக நேரம், வேலைப் பளு போன்றவை இருந்தாலும் இந்தப் பயணம் மிக அற்புதமானதுமுற்றிலும் புதிய அனுபவம் என்று குறிப்பிடுகிறார். அலாஸ்கா, சவுதி அரேபியா, தைவான் போன்ற நாடுகள் பார்வைக்கு பிரமாதமாக இருந்தன என்றும் ,சைபீரியாவில் மக்கள் அன்புடன் பழகினார்கள் என்றும் சொல்கிறார்.

பல சவால்களை வெற்றிகரமாகக் கடந்து வந்த சாரா, தமது பயணம் மற்ற இளம்பெண்களை விமானத் துறையில் சேர ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தில் வசிக்கும் ஹர்ப்ரீத் சாண்டி இந்திய வம்சாவளிப் பெண்.

32 வயதானவர். உலகின் தென் துருவமான அண்டார்ட்டிகாவுக்கு தனியாகவே சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் இவர்.

அதுவும் எப்படி? பனிச்சறுக்கு செய்தபடியே…1126 கிலோமீட்டர்-கிட்டத்தட்ட 700 மைல்கள் நடந்திருக்கிறார். மைனஸ் 50 டிகிரி குளிரையும், வேகமாக வீசும் பனிக்காற்றையும் சமாளிக்கும் உபகரணங்களை, ஸ்லெட்ஜ் எனப்படும் ஒரு பனிச்சறுக்கு ட்ராலியில் தன் உடைமைகளாக வைத்து இழுத்துச் சென்றுள்ளார். 40 நாட்கள் தனியாகவே நடந்து இந்த சாதனையைச் செய்திருக்கிறார்.

பிரிட்டன் ராணுவத்தில் அதிகாரியாக இருக்கும் இவர் ஒரு ஃபிசியோதெரபிஸ்ட் ஆகவும் இருக்கிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com