உள்ளுணர்வு – அறிவியலா? அபத்தமா?

உள்ளுணர்வு – அறிவியலா? அபத்தமா?
Published on
– ஜி.எஸ்.எஸ்.

1865 ஏப்ரல் 16ஆம் தேதி வாஷிங்டனில் கோலாகலமாக மலர்ந்தது. காரணம் உள்நாட்டுப் போர் ஒன்று அன்று முடிவுக்கு வந்திருந்தது. இந்த சமாதான நிலைக்கு முக்கிய காரணகர்த்தாவாக ராணுவ தளபதி கிராண்ட் என்பவரும் அவர் மனைவி ஜூலியாவும் கருதப்பட்டனர். எனவே அவர்களுக்கு அன்று பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், வாஷிங்டனுக்கு வந்து சேர்ந்த உடனேயே அந்த நகரை விட்டு குடும்பத்தோடு வெளியேறி விடவேண்டும் என்று ஜூலியா அடம் பிடிக்கத் தொடங்கினாள். நியூஜெர்சியில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்றாள். அவள் கணவனுக்கு மனைவியின் இந்தத் தவிப்பு வியப்பாக இருந்தது. 'என் உள்ளுணர்வு சொல்கிறது. இங்கிருந்து நாம் சென்று விடவேண்டும் என்று' இப்படி திரும்பத் திரும்ப அவள் கூற, ஒரு கட்டத்தில் 'நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகள் இங்கு உள்ளன. அவற்றை முடித்துவிட்டு கூடிய சீக்கிரத்தில் சென்று விடலாம்' என்று சமாதானப்படுத்தினார் அவள் கணவர்.

அதற்கு அடுத்த நாள் ஜூலியாவின் பரபரப்பு மேலும் அதிகமானது. அன்று மதியம் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மனைவியிடமிருந்து அவளுக்கு ஒரு செய்தி வந்தது. அன்று இரவு நடைபெறவிருக்கும் நாடகம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜூலியா அழைக்கப்பட்டிருந்தார்.

ஏனோ தெரியவில்லை அந்த அழைப்பிதழைக் கொண்டு வந்தவர் மீது ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது ஜூலியாவுக்கு. தான் அன்று மதியமே வாஷிங்டனிலிருந்து கிளம்பி விடப் போவதாகவும் எனவே அந்த நாடகத்துக்கு வர முடியாது என்றும் கூறி அனுப்பினாள். வந்தவன் விடவில்லை. பலவிதங்களில் அவளை நாடகத்துக்கு வருமாறு வற்புறுத்தினான். முடியவே முடியாது என்று மறுத்து விட்டாள் ஜூலியா.

தன் கணவனுக்கு அன்று வாஷிங்டனில் ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்று அவளுக்கு உள்உணர்வு ஏற்பட்டது. கணவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக அந்த நகரில் இருந்து வெளியேற வேண்டும் என்று அலறினாள். திகைத்துப் போன கணவர் அன்று மாலை அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று வாக்களித்தார். 'இன்று இரவு இந்த நகரில் ஏதோ பெரும் விபரீதம் நடக்கப்போகிறது' என்று ஜூலியா அங்கிருந்த ஒரு தோழியிடம் குறிப்பிட்டாள். பி​ன் திட்டமிட்டபடி கணவனையும் அழைத்துக்கொண்டு நகரை விட்டு வெளியேறினாள்.

ன்று இரவு அந்த நாட்டையே உலுக்கி போட்டது ஒரு நிகழ்வு. ஆபிரகாம் லிங்கனும் அவர் மனைவியும் அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த ஒருவன் அவரைப் படுகொலை செய்துவிட்டான். ஜூலியாவின் கணவன் நகரில் இருந்திருந்தால் லிங்கனுக்குப் பாதுகாப்பாக சென்றிருப்பார் என்பதால் அவரும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆக ஜூலியாவின் உள்ளுணர்வுதான் அவள் கணவனின் உயிரை அன்று காப்பாற்றியது எனலாம்.

நம் அனைவருக்குமே ஏதோ ஒரு விதத்தில், ஒரு சந்தர்ப்பத்தில், இந்த உள்ளுணர்வு ஏற்பட்டிருக்கும். சிலரைப் பார்க்கும்போதே அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது என்று நமக்குத் தோன்றும். இதற்கு தர்க்க ரீதியான எந்த காரணமும் இல்லாமலும் இருக்கலாம்.

குடும்பத்தோடு வெளியே செல்ல கிளம்பும்போது 'ஏன்னு தெரியலை எனக்கு என்னவோ இப்ப அந்த இடத்துக்கு போக வேண்டாம்னு தோணுது' என்று நீங்கள் கூறலாம்.

எதையும் பகுத்து அறிய வேண்டும் என்பது பொதுவான நியதி. ஆனால் நமக்குள்ளே கேட்கும் ஒரு குரலை (உள்ளுணர்வு) அலட்சியம் செய்யலாமா? இதற்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு இல்லையா?

சிலசமயம் அறிவைவிட நம் ஆழ்மனதை நாம் அதிகமாக நம்புவோம் ஆனால்
இப்படி நம்புவது சரியா இல்லையா
இதை அறிவியல் ஏற்றுக் கொள்கிறதா இல்லையா?

இந்தியாவில் சிறிது காலத்துக்கு முன்பு ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில் பல மனவியல் மருத்துவர்களிடம் சில கேள்விகள் வைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமாக 'உங்கள் நோயாளிகள் தொடர்பான முடிவுகளை எதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் எடுக்கிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு 'நோயாளிகள் கூறும் தகவல்கள், மரபியல் துறையில் தான் பெற்ற பயிற்சி' ஆகியவற்றோடு அவர்கள் கூறிய மற்றொரு முக்கியமான காரணம் உள்ளுணர்வு.

ஆக, நடைமுறையில் மனவியல் துறையிலும் உள்ளுணர்வு என்பதற்கு முக்கிய பங்கு இருக்கத்தான் செய்கிறது.

மேலே குறிப்பிட்ட ராணுவத் தளபதியின் மனைவி ஜூலியா போலவே சரித்திரத்தில் உள்ளுணர்வு தொடர்பாக வேறு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்குத் தனது உள்ளுணர்வில் நிறைய நம்பிக்கை உண்டு. அவரது அலுவலகத்தில் ஒரு நாள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்துக்காக அனைவரும் குழுமி விட்டார்கள். இன்னும் 15 நிமிடங்களில் விருந்து தொடங்க வேண்டியதுதான் என்ற நிலையில் 'இங்கு ஏதோ ஆபத்து என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எல்லோரும் உடனடியாக வெளியேறலாம்' என்றபடி அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார் சர்ச்சில்.

சில நிமிடங்கள் கழித்து அந்த பகுதியில் ஒரு சிறிய வெடிகுண்டு விழுந்தது. சமையலறை மற்றும் விருந்து அறையின் பெரும்பகுதி சிதிலமடைந்தது.

ஜேகே என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட ஓர் ஆங்கிலேயப் பெண்மணிக்கும் இதுபோன்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. வருங்காலத்தில் நடக்க இருப்பதை பலமுறை அவளால் கணிக்க முடிந்தது. ஆனால், இதை நம்ப மறுத்தார் அவரது உறவினர் ஒருவர், தான் தெருவில் தினமும் சந்திக்கும் ஒருவரின் பெயரைக் கூறி நாளை அவரை சந்திப்பேனா? என்று கேட்டார். நிச்சயம் சந்திப்பீர்கள் என்றார் ஜேகே.

அடுத்த நாள் தான் வெளியில் செல்லாமல் இருந்துவிட்டால் ஜேகேவின் கணிப்பை பொய்யாக்கி விடலாம் என்று திட்டமிட்டார் அந்த உறவினர். அதே போல் வீட்டில் முடங்கிக் கிடந்தார். அப்போது அவர் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. திறந்தால் சாலையில் தினமும் சந்திக்கும் அந்த நபர்!

'தினமும் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறோமே, இன்றாவது உங்களை சந்தித்துப் பேசலாம் என்று தோன்றியது. அதனால்தான் நானே உரிமை எடுத்துக்கொண்டு வந்து விட்டேன்' என்றார் அவர்!
இப்போது சொல்லுங்கள்… உள்ளுணர்வு அறிவியலா? அபத்தமா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com