கவிதை!

கவிதை!
Published on
-செ.கலைவாணி, சேலம் 
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

ழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே,
ருவானாதே இவ்வுன்னத உலகம்.
டலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி,
லகை எந்நாளும்  இயங்கச் செய்பவனே உழைப்பாளி.
ழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும்
ழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது.
ழைப்போரின் வியர்வைத்துளிகள்  உருவாக்கிய உலகம்,
ழைப்போரால் பசியாறுகிறது.
ழைப்பவன் அழுக்காகி உலகை அழகாக்குகிறான்.
ழைப்பவனின் வியர்வையால் உலகம் மணக்கிறது.
ழைப்பவன் ஓய்வெடுத்தால்
லகம் சுழல்வதை நிறுத்தும்.
ழைப்பவன் உழைக்க மறுத்தால்
லகம் இன்னலில் சுழலும்.
ழைப்பாளரின்றேல் உலகில்லை.
லகில்லையென்றால் உயிர்களில்லை.
ழைப்பாளிகளின் உருக்குக் கரங்களால் உருவான உலகம்
ழைப்போரை உயர்த்திட உருவானதே உழைப்பாளர் தினம்.
லகில் சமத்துவம் மலர உழைப்போரை ஏத்துவோம்.
ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
ழைக்கும் தோழர்களை ஒன்றாய்த் திரட்டி
லகம் நமதென்று சிந்து பாடுவோம்.

***************************

வாசிப்பதும் தியானம்!

புத்தகம் போதிமரம்.
புரட்டுவோர் புத்தர் ஆகலாம்.
உலகமே இயற்கை எழுதும்
வண்ணப் புத்தகம் தான்.
அணிவகுத்த எண்ணங்கள் எழுத்தாணி தழுவ
பிறந்தது புத்தகமாய்.
சைகையில்  தொடக்கம், ஒலிக்குறிப்பில் வளர்ச்சி
ஓவிய எழுத்துகள்!
அகத்தைப் புத்தாக்கம் செய்திடும்
நல்லதொரு புத்தகம்.
திருப்பப் பட்ட புத்தகம்,
'திறக்கும்' நம் மனக்கதவை!
தன்னை மறந்த நிலையில்
புத்தகம் படித்தலே தியானம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com