
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரான்னு… (லாட்டரிச் சீட்டு இல்லீங்க…. இது வேற மேட்டர். கொஞ்சம் சீரியஸ்!) தினசரி நம்பப் பொண்ணுங்க தில்லா, எப்படியோ நியூஸைப் பிடிச்சுடறாங்கப்பா!
**************
**************
ஆந்திராவில் நடந்ததோ ஸ்பெசல் ஐட்டம்! ஓர் இளஞ்ஜோடிக்குத் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். கல்யாணத்துக்கு சில நாட்கள் இருக்கும்போது, வருங்காலக் கணவனை அத்துவான மலைப்பகுதிக்கு ரகசியமாக வரச் செய்கிறாள் மணப்பெண். "கேக் வெட்டிக் கொண்டாடலாம்" என்று இவனும் ஆசையாகப் போகிறான். "சர்ப்ரைஸ்" என்று அவனது கண்களை தனது துப்பட்டாவால் கட்டிவிட்டு, 'சரக்' என்று கழுத்தை வெட்டிவிடுகிறாள் அந்த இளைஞி!
"கல்யாணத்தை நிறுத்த எனக்கு வேற வழி தெரியலை. நான் வேறொருவரைக் காதலிக்கிறேன்"னு சொல்றா.
அவளே கழுத்தையும் அறுத்துட்டு, மருத்துவமனையிலும் கொண்டு சேர்த்திருக்கா… டைம்லி ஹெல்ப்! அந்தப் புண்யவதியின் பெயர் புஷ்பா!
"புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சியா? ஃபயர்டா!"ங்கிற 'புஷ்பா' பட டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.
ஓர் ஆணை நயவஞ்சகமாகக் கழுத்தை அறுக்க தைரியம் இருக்கு… ஆனா பெற்றோர்கிட்ட தன் காதலைச் சொல்ல தைரியம் இல்லியாம்! சரி, நம்பிட்டோம்!
**************
அம்மா, குலத் தெய்வங்களே…!
'கல்யாணக் கனவு' என்பது பெண்ணுக்கும் பெண்ணைப் பெத்தவங்களுக்கும் மட்டுமில்லை… ஆண்களுக்கும் அவர்களைப் பெற்றவர்களுக்கும்கூட ஆயிரம் கனவுகள் உண்டு!
'பெண்' என்ற ஒரே காரணத்தால், காவல்துறையும் சட்டமும் உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை. விசாரித்து, கண்டித்து அனுப்பிவிடுவார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட ஆண்கள், அவர்களின் பெற்றோரின் மனநிலை? எவ்வளவு மன உளைச்சல் அடைவார்கள்?
நம் கைதான்… அதை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீட்டலாம். அது நம் விருப்பம். ஆனால் அது மற்றவர்களின் கண்களைக் குத்தி ரணம் ஆக்காமலும் பார்த்துக் கொள்ளணும் இல்லையா?