
தேவை: குதிரைவாலி அரிசி- இரண்டு கப், பொடித்த வெல்லம் – 2 கப், முந்திரி, திராட்சை – கால் கப், தண்ணீர்- 4 கப், ஏலக்காய் தூள்- 1/4டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு வடிகட்டி கொள்ளவும். அரிசியை கழுவி நன்கு குழைய வேக விடவும். சாதம் குழைந்து வரும் போது வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறி சேர்ந்து வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து ஏலக்காய் தூள் தூவி இறக்க சுவையான குதிரைவாலி சர்க்கரை பொங்கல் தயார்.
———————————————
தேவை: சாமை அரிசி – 2 கப், கேரட்-3, பச்சை மிளகாய் – 6, கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு- 2 கரண்டி, வறுத்து பொடித்த தனியா-அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை, மல்லி, உப்பு, பெருங்காயப்பொடி,
ம.தூள் – சிறிதளவு, தாளிக்க, கடுகு, உ பருப்பு, வறுத்த வேர்க்கடலை.
செய்முறை: சாமை அரிசியை உப்பு போட்டு வேக வைத்து உதிரியாக ஆறவிடவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உ பருப்பு, பெருங்காயம் ,கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பச்சை மிளகாய், துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும். பின் பொடித்த தனியாப்பொடி சேர்த்து நன்கு கிளறவும் .தேவையென்றால் வறுத்த முந்திரி, கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான, சத்தான சாமை கேரட் சாதம் தயார்.
———————————————
தேவை: சாமை, வரகு, குதிரைவாலி-தலா- அரை கப், துவரம் பருப்பு-2 கப், புளிக்கரைசல்-முக்கால் கப், பெருங்காயப் பொடி, ம பொடி,- கால் டீஸ்பூன், வறுத்து அரைக்க : கடலைப் பருப்பு-கால் கப், காய்ந்த மிளகாய்-8, தனியா-கால் கப், வெந்தயம், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, கொப்பரைத் தேங்காய்-1/4 கப்,
தாளிக்க: கடுகு, சீரகம், உ பருப்பு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்-2
தே.எண்ணெய், நெய்.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளதை வறுத்து , ஆறியபின் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும். பருப்பை வேக வைத்துக்கொள்ளவும். சிறுதானியங்களை அகலமான பாத்திரத்தில் இட்டு நன்கு வேகவிடவும். நன்கு குழைய வெந்ததும், பருப்பு, ம.தூள், சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சாதத்துடன் சேர்க்கவும். வறுத்த பொடி, உப்பு போட்டு நன்கு கலந்து புளிக்கரைசல் ஊற்றி சேர்ந்து வந்ததும் இறக்கவும். தேவையென்றால் விரும்பிய காயும் சேர்த்து செய்யலாம். அப்பளம், ஊறுகாய் சேர்த்துப் பரிமாறவும்.
———————————————
வரகு ஃப்ரூட் தயிர் சாதம்
தேவை: வரகரிசி – 2 கப், தயிர் – 2 கப், வெண்ணைய் – 2 டீஸ்பூன், உப்பு, விரும்பிய பழக்கலவை- மாதுளை முத்துக்கள், நறுக்கிய அன்னாசி, நறுக்கிய ஆப்பிள், விதை நீக்கிய கறுப்பு திராட்சை – தேவைக்கு,உப்பு.
செய்முறை: வரகரிசியை குழைய வேக வைத்துக்கொள்ளவும். பின் அதனுடன் உப்பு, தயிர், வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும். சற்று ஆறியதும் பழங்களைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். குளிர வைத்தும் பரிமாறலாம்.
– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
———————————————