ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள்: பிரபுராம்

"இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒருநாள் மிருகமா மாறிவிடுவேன் ஜாக்கிரதை."

"அட நீங்க வேற… எலியைப் பாத்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்."

*****************************

"உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?"

"எப்படிச் சொல்றீங்க?"

"ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்க டாக்டர்னு சொன்னாரே!"
ஏ. எஸ். கோவிந்தராஜன், சென்னை

*****************************

"கொஞ்ச நாளைக்கு கட்சியை விட்டு ஒதுங்கி இருக்கலாம்னு நினைக்கிறேன்யா!"

"நல்ல முடிவு தலைவரே… இல்லைன்னா கட்சி மேலிடம் உங்களைக் கட்சியை விட்டே ஒதுக்கிடுவாங்க!"

*****************************

"ஆறு மாசத்துக்கு முன்னால நீங்க அந்தக் கட்சியிலிருந்து விலகினது நல்லதாப் போச்சு தலைவரே?"

"என்னடா சொல்ற?"

"இப்போ அந்தக் கட்சி நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்கு."
-சி.ஆர்.ஹரிஹரன், கேரளா

*****************************

"எங்க வீட்டுக்கு வந்த திருடன், கையில ஆசிட் எடுத்திட்டு வந்திருந்தான் சார்!"

"பீரோ சாவி தரலைன்னா, உங்க மேல ஊத்தலாம்னா?"

"இல்லை சார்… எங்க வீட்டு நகைகளோட தரத்தை செக் பண்ண சார்!"

*****************************

"தேர்தல் விதிகளை நீங்க மதிக்காமல் நடந்துக்க என்ன காரணம்?"

"நான் பகுத்தறிவுவாதி யுவரானர்… எந்த விதியையும் நான் நம்பமாட்டேன்."
– வி. ரேவதி, தஞ்சை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com