அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on

'ஜெய்பீம்' பார்த்தீங்களா? அனுஷாவின் அபிப்ராயம் என்ன?
பி.லலிதா, திருச்சி

பார்த்தேன்அதாவது OTTயில் வெளியான அன்றே சர்ச்சைக்கு முன்பே
முதல் முப்பது நிமிடங்களில் கதை போகும் போக்கு தெரிந்துவிட்டது. தூசித் தட்டிய பழைய வழக்கு, ஜாதிய வன்மம், போலீஸ் அராஜகம் என, 'விசாரணை, வழக்கு எண்' படங்களின் பாதையில்தான் கதை பயணிக்கப்போகிறது என்று புரிந்ததும், மன உளைச்சலைத் தவிர்க்கமீதி படத்தைப் பார்க்கவில்லை.

இப்ப என்னடான்னாபடத்துக்கே முற்றுப்புள்ளி வச்சுடுவாங்களோன்ற அளவிற்கு சர்ச்சை, தீ பத்தி எரியுது.

காலம் காலமா ஏதோ ஒரு ஜாதி, வேறோரு ஒரு ஜாதி மீது, ஏதோ ஒரு கட்டத்தில், ஏதாவது ஒரு வன்மம் உமிழ்ந்திருக்கும்தான். அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட குற்றச் செயல்கள், பொய் வழக்குகள், நியாயமற்ற தண்டனைகள், குறிப்பாக போலீஸ் அராஜகம் நடந்திருக்கும்தான்.

அதையெல்லாம் தோண்டித் தோண்டி சினிமா செய்கிறேன் என்று கிளம்பும் படைப்பாளிகள், அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுமோ என்பதை ஆராய வேண்டாமா? பொறுப்போடு கூடிய படைப்புகள் தேவை.

86 வயதிலும் இளமை + அழகு + சுறுசுறுப்புடன் வலம் வரும் பி.சுசீலா அவர்களைப் பற்றி ஒரு நாலு வரி சொல்லுங்களேன்?
ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

இது ரொம்ப அநியாயம்! ஆமா சொல்லிப்புட்டேன்ஒரு நாலு நாள் பேசினாலும் தீராத, தீரா இசைக் காதலை நாலு வரில எழுதச் சொன்னா காண்டாகுது!

தங்கத்தை அப்படியே தகதகன்னு உருக்கி, மலைத்தேனை குண்டான்ல கொண்டாந்து முக்கி, ஒரு கட்டு கரும்பு ஜூஸ்ல கலக்கிய மாதிரி ஸ்வீட் வாய்ஸ்! ரொம்ப கேட்டா, சுகர் கம்ப்ளெயின்ட் வர்றது கியாரண்டி!

தமிழ் மொழியைப் பிழையில்லாம, உணர்ச்சி ததும்ப, சரியான பாவத்தோட, அப்படியே கதாபாத்திரத்தோட ஜெல் ஆகி பாடறதனால, படத்துல சரோஜாதேவி, சாவித்ரி, தேவிகாவே பாடறதா நாம்பளே நம்பி ஏமாந்திருக்கோமே! இதைவிட பாராட்டு தேவையா?

l பி.சுசீலா, விசும்புவாங்க (மலர்ந்தும் மலராத…)
l விக்குவாங்க (உன்னைக் கண் தேடுதே…)
l அழுவாங்க (என்ன நினைத்து என்னை…)
l லாலி பாடுவாங்க (வரம் தந்த சாமிக்கு…)
l தாலாட்டுவாங்க (கண்ணான சூரியனே…)
l சிரிப்பாங்க (சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே…)
l காதலிப்பாங்க (நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்…)
l ஹம்மிங்லயே, 'காஞ்சனா' எஃபெக்ட் காட்டுவாங்க… (நெஞ்சம் மறப்பதில்லை…)

'ப்ரியா' படத்துல வர்ற, 'டார்லிங்டார்லிங்டார்லிங்ஐ லவ் யூ' பாட்டைக் கண் மூடிக் கேட்டுப்பாருங்கநாம்பளே தீம் பார்க்குல, சறுக்கு விளையாடற மாதிரி ஜாலியா இருக்கும்.

இதெல்லாம் சும்மா சாம்பிள்தோண்டினா வைரச் சுரங்கமே கிடைக்கும்.

'மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல் எடுத்துப் பாட வந்தோம்' அப்படிப் பாட வந்த சரஸ்வதியின் பிம்பம்தான் பி.சுசீலான்னு முடிச்சுக்குவோமா ஜெயகாந்தி?

கண்மூடித்தனமாகப் பாசம் வைப்பது யார்ஆணா? பெண்ணா?
ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்

இதுல எல்லாம் டவுட்டே வரக்கூடாது ஸ்ரீவித்யாஒரே பதில்தான்! நிரந்தரமான பதில்! நிச்சயமான பதில்! பிறந்த உடனே அம்மாஅப்பா மீது உயிரினும் மேலான பாசம்! கூடப் பொறந்தவங்க மீது அதீத ரத்த பாசம்! அப்புறம் காதலனோ, கணவனோஅவன் மீது வெறித்தனமான பாசம்!

கருவுற்றதும், கண் மண் தெரியாமல் பாசம்!

வளர்க்கும் நாய், பசு, ஆடுகள், செடி, கொடிகள் மீது கொள்ளைப் பாசம்!

பேரன், பேத்திகள் மீதோ பேரானந்த பாசம்!

கோயில் கோயிலாகப் போய், சாமி மீது உருகி உருகிப் பாசம்!

இப்படிக் கடைசி வரை பைத்தியம் போல பாசம் வைத்து, புத்தி பேதலிப்பது பெண் ஜன்மம் மட்டுமே!

காரணமே இல்லாமல் சண்டை போடுவதும், அந்தப் பாசத்தின் வெளிப்பாடுதான்!

தன்னைப் பற்றி நினைச்சுப் பார்க்கக்கூட நேரமில்லாதவங்களைக் கூட, துரத்தித் துரத்தி நேசித்து, அது கிடைக்காமல் போகும்போதும், பாச டோஸேஜை அதிகப்படுத்துவார்களே தவிர, வெறுக்க மாட்டார்கள். காரணம்பெண்ணாகப் பிறந்ததே பாசம் வைக்கத்தான்! ஸோ, கண்ணைத் திறந்துக்கிட்டே அதைச் செய்வோம்.

பெண்களைப் பள்ளிக்கு அனுப்பப் பயப்பட வேண்டிய நிலை உருவாகி வருகிறதே!
ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்

ல லட்சம் பெண் குழந்தைகள் படிக்கும் யுகத்தில், ஒன்றிரண்டு வருந்தத்தக்க சம்பவங்கள் நடக்கக்கூடும்அதுக்காக பள்ளிக்கு அனுப்பவே பயப்பட்டால் எப்படி? பல்லிக்குப் பயந்து கூரையைக் கொளுத்தின கதைதான்!

பதின்மப் பெண்களுக்கு இளம் ஆசிரியர் ஹீரோ போல் தெரியக்கூடும்அது அந்த வயசுக்கே உரிய இயல்பான ஈர்ப்பு! ஆனால், அதை அந்த ஆசிரியர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வதும், பெற்றோர்கள் கண்காணிப்பு இல்லாமல் விட்டேத்தியாக விடுவதும்தான் பிரச்னைக்குத் தீ வார்க்கிறது.

ன்றைக்கு ஐந்து வயதுக் குழந்தையே விவரமாக இருக்கும்போது, இளம் பெண்களுக்குப் பாலியல் பிரச்னை வந்தால், அதை அவர்கள் பெற்றோர், டீச்சர், தலைமை ஆசிரியர், தோழிகள் என யாரிடம் வேண்டுமானாலும் சொல்லி, அந்த நிமிஷமே மாட்டி விடலாம்தீர்வு காணலாம். ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது, வீடியோ, ஆடியோ ரிகார்டிங், கான்கால் என கிராமத்துப் பெண்களுக்குக்கூட எல்லாமே தெரிகிறது. கால் செருப்பைக் கையில் எடுப்பது கஷ்டமா?

என்னைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணுக்கு எந்தச் சூழ்நிலையிலும் தன்னைத்தானே காத்துக்கொள்ளத் தெரியணும்ஆனால், ஏதோ ஒரு பலவீனம், மனக்குழப்பம், பயம், குடும்பச் சூழ்நிலை போன்றவை ஒருசில பெண்களை வேறு ஏதோ முடிவு எடுக்கத் தள்ளுகிறது.

வர்களது மனக்குறையைக் கேட்டு, தைரியமூட்டி, தட்டிக்கொடுத்து, நல்வழி காட்டி உதவ பெற்றோர், ஆசிரியர் குறிப்பாக சமூகம் கூடிக்கலந்து உதவணும். பள்ளிகளில் முறையான உடலியல், உளவியல் மற்றும் பாலியல் குறித்தான அடிப்படை விழிப்புணர்வோடு, 'மாரல் சயின்ஸ்' எனப்படும் போதனை வகுப்புகளும் நடத்தப்பட வேண்டம். அதுவும் உடனேஉடனே…!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com