ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
– ஆர். மகாதேவன், திருநெல்வேலி
படங்கள்: பிள்ளை

"ஆடித் தள்ளுபடியில வாங்க அந்த ஜவுளிக் கடையில மட்டும் ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்?"

"மெகா சீரியலை இடை விடாம காட்டறாங்களாம்!

**************************************

"நீ திருடினது உண்மையா? சொல்லுடா?"

"நானே சொல்லிட்டா நீங்க கண்டுபிடிக்க எதுக்கு இருக்கீங்க ஏட்டைய்யா?"

**************************************

"டாக்டருக்கு வரவர ஞாபக மறதி அதிகமாயிட்டேப் போகுது…

"அப்படி என்ன பண்ணிட்டாரு?"

"ஆபரேஷன் தியேட்டருக்குப் பதிலா அபிராமி தியேட்டருக்குப் போயிட்டாரு…

**************************************

"டாக்டர்… பேஷண்ட் பாதி ஆபரேஷன்லேயே மயக்கம் தெளிஞ்சிட்டாரு. என்ன செய்ய?"

"ஆபரேஷன் பீஸ் எவ்வளவுனு சொல்லு போதும்…"

**************************************

"நீங்க  கொடுத்த ப்ளானை வச்சுத்தான் இதைக் கட்டினேன்."

"ப்படியா? கொண்டா அந்தப் பிளானைப் பார்க்கலாம்."

"அஸ்திவாரத்துக்கு அடியிலேதான் அது இருக்கு!"

**************************************

"அந்த நெய் தயாரிப்பு நிறுவனத்தை ஏன் சோதனை போடறாங்க?"

"மணல் மணலாக நெய் இருக்கும்னு சொன்னாங்களாம்!"

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com