புண்ணியம்!

புண்ணியம்!
Published on
சிறுகதை : கீதா சீனிவாசன்
ஓவியம் : சேகர்

காலையிலிருந்தே கலையரசி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். குடும்ப நலனுக்காக அன்று சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். குறிப்பாக, அந்த ஏரியாவில் பிரபலமான ஸ்வாமி ராமன்ஜி அதில் கலந்துகொண்டு ஆசி வழங்கவும் சம்மதித்திருந்தார்.

கணவரையும் மகனையும் கூட சீக்கிரமே எழுப்பி, குளிக்க வைத்து சிறு சிறு வேலைகளை செய்யச் சொல்லியிருந்தாள்.

எட்டு சுமங்கலிகளுக்கான பொருட்களை அழகாக எடுத்து வைத்தாள்.

பூஜை அறை தெய்வீகமாகக் காட்சி அளித்தது. படங்கள் சுத்தமாகத் துடைக்கப்பட்டு, குங்குமம், சந்தனம் வைக்கப்பட்டுஅங்கு இல்லாத தெய்வங்களே இல்லை எனும் அளவிற்குக் காணப்பட்டது. மணம் மிக்க ஊதுபத்தி தனது பணியைச் செய்து கொண்டிருந்தது. அழைக்கப்பட்டவர்கள் வர ஆரம்பித்தனர்.

சரியாகப் பத்து மணிக்கு ராமன்ஜி வந்தார். கலையரசி வரவேற்று பூஜையறைக்கு அழைத்துச் சென்றாள்.

"என்னம்மாஎல்லாம் ரெடியா?"

"ஆமாம் ஸ்வாமி…"

"நல்லதுவீட்ல யாராவது வயசானவங்க இருக்காங்களா?"

"என் மாமியார் இருக்காங்க. கொஞ்சம் உடம்பு முடியாதவங்க. மாமனார் இல்லஅதான் அவங்க ரூமிலேயே இருக்காங்க."

"பரவால்லகாலையில சாப்பிட்டாங்களா?" ராமன்ஜி கேட்க, சற்றுத் தயங்கிய கலையரசி "காபி சாப்பிட்டாங்க. பூஜை முடிஞ்சதும் எல்லாரும் சாப்பிடுவோம்!" என்று சொன்னாள்.

"ல்லம்மாவயசானவங்களை பட்டினியோட இருக்க வச்சு, நாம செய்யற எந்த வழிபாடும் புண்ணியத்தைக் கொடுக்காதும்மா. மொதல்ல அவங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்திட்டு வா" கொஞ்சம் கட்டளை தொணியில் ராமன்ஜி சொல்ல, கலையரசி திகைப்பையும் வெறுப்பையும் மறைத்துக்கொண்டு, மாமியாரை கவனிக்க விரைந்தாள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com