– தனுஜா ஜெயராமன்.பழங்காலத்தில், 'ஸ்ரீமாபில க்ஷேத்ரம்' என்று அழைக்கப்பட்ட சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் விஸ்தாரமான இடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருவறையில் பிரதான மூலவராகக் காட்சி தருபவர் ஸ்ரீ பட்டாபிராமர். இங்கு ஸ்ரீ ராமர் பத்ராசலத்தில் காட்சி தரும் திருக்கோலத்தில் காட்சி தருவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. வடநாட்டில் பத்ராசலத்தில் கோயில் கட்டிய ஸ்ரீ ராம பக்தரின் வம்சாவழியில் தோன்றிய ஆதிநாராயணதாசர் என்பவர் இந்தத் திருக்கோயிலைக் கட்டியதாகச் சொல்கிறது தல வரலாறு. அதன் காரணமாகவே இத்திருக்கோயிலும், 'தட்சிணபத்ராசலம்' என்று அழைக்கப்படுகிறது. ராம பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், இங்கே கோயில் கொண்டதாகச் சொல்கிறது இக்கோயிலின் தல புராணம். இந்தத் தலம் 150 வருடங்கள் தொன்மை வாய்ந்த பழைமையான தலமாக விளங்குவது இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பு..மூலவர் ஸ்ரீ பட்டாபிராமனின் இடது புறம் சீதா பிராட்டியார் அமர்ந்த கோலத்தில் விளங்க, வலது புறம் ஸ்ரீ லக்குவன் குடைபிடிக்க, ஸ்ரீ அனுமன் ஸ்ரீ ராமனின் பாதங்களைத் தாங்கிப் பிடிக்க, பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் ஸ்ரீ ராமர் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் சிலைகள் 1920ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல்கிறது தல வரலாறு..ஸ்ரீ கோதண்டராமர் சன்னிதிக்கு வலப்புறமாக ஸ்ரீ ரங்கநாதர் சன்னிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி பாம்பணையில் சயனக் கோலத்தில் காட்சி தர, அவரது காலடியில் ஸ்ரீ தேவி, பூதேவி இருவரும் அமர்ந்தபடி காட்சி தருகின்றனர்.ஸ்ரீ கோதண்டராமர் சன்னிதிக்கு இடப்புறமாக ஸ்ரீ நரசிம்மர் சன்னிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் யோகப் பட்டத்துடன் காட்சி தருவது தனிச் சிறப்பு. இதன் நேர் எதிரே அனுமன் சன்னிதி. இவரது வலக்கையில் சஞ்சீவி மலையை வைத்திருக்க, இடது கையில் அபய முத்திரை காட்டியபடி அருள்பாலிக்கிறார். இங்கு ஸ்ரீ அரங்கநாயகி தாயாரும் தனிக்கோயிலில் காட்சி தருகிறார்..திருக்கோயிலுக்குள்ளேயே வலதுபுறமாக மிக பிரம்மாண்டமான திருக்குளம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தெப்ப உத்ஸவம் விமரிசையாக நடைபெறும். இக்கோயிலின் உள்ளே அழகிய சிறிய நந்தவனம் ஒன்றும் அமைந்துள்ளது. கோயிலில் சித்திரை மாதம் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். அப்போது ஹனுமத் ஜயந்தி மற்றும் தோட்ட உத்ஸவமும் நடைபெறும். ஏழாம் நாட்கள் தேரோட்டம். ஆடி ச்ரவணத்தன்று கஜேந்திர மோட்சம் மற்றும் ஆடி உத்தரமும் வெகு சிறப்பாக நடைபெறும். திருக்கல்யாண உத்ஸவமும் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும், நவராத்திரி,.ஸ்ரீ ஜயந்தி, திருபவித்ரோத்ஸவம், ரத சப்தமி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி போன்ற திருநாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். பிரம்மோத்ஸவம் நடைபெறும் நாளில் பெருமாள் பட்டாபிஷேகக் கோலத்தில் அருள்பாலிப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம் மற்றும் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோயிலில் ஆதிசேஷன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இங்குள்ள புற்றுக்குப் பால் வார்த்து, அனந்தனை பிரதட்சிணம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்..இத்தகைய தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் ஸ்ரீ பட்டாபிராமரை தரிசித்து மகிழலாம். அத்துடன், கேட்ட வரம் தரும் ஸ்ரீ கோதண்டராமரை தரிசித்து வேண்டிய அருளையும் பெற்று உய்யலாம்..தரிசன நேரம் : காலை 6.30 முதல் 10.30 மணி வரை. மாலை 5.30 முதல் 8.30 மணி வரை. கோவிட் காலத்தில் அரசாங்க விதிமுறைப்படி கோயில் தரிசன நேரம் மாறுபடும்..அமைவிடம் : சென்னை, மேற்கு மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.