வந்தார்கள்… வென்றார்கள்… சென்றார்கள்…

வந்தார்கள்…  வென்றார்கள்…  சென்றார்கள்…
Published on
– ஹர்ஷா
ந்தவொரு விளையாட்டிலும் உலகக் கோப்பை என வந்தால் அதன் மதிப்பு அது ரசிகர்களிடையே ஏற்படுத்தும் ஆர்வ அலைகளும் அதிகம் தான். அதுவும் கிரிக்கெட்டில் ஐசிசி டி20 உலகக் கோப்பை என்றால் அதன் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா. அத்தகைய கொண்டாட்டம் தான் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கியது பட மற்ற விளையாட்டுகளை விட இரு நாடுகளிலும் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் மூலம் பல நேரங்களில் உணர்ச்சிகளின் அலை அதிகரித்து வருகிறது
இந்த ஆட்டத் தொடரில் இரு அணிகளின் வெற்றி / தோல்விகளுக்குப் பின் அரசியல் பார்வை இருப்பதைத் தவிர்க்க முடியாது. பாகிஸ்தானில் கிரிக்கெட் அணி அதன் முன்னாள் கேப்டன் இம்ரான்கானின் கையில் உள்ளது. அதே நேரத்தில், தற்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் தந்தை அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார்.
கடைசியாக 2016இல் டி20 ஐசிசி உலகக் கோப்பை நடந்த பிறகு, 2018இல் உலகக் கோப்பை டி20 நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், அணிகளின் பரஸ்பர திட்டங்கள் காரணமாக அது நடக்கவில்லை.2020இல் டி20 உலகக் கோப்பை திட்டமிடப்பட்டபோதும், கொரோனா பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக நடைபெறவில்லை. கடைசியில் ஐந்து ஆண்டு இடைவேளைக்குப் பிறகு டி20 போட்டிகள் தொடங்கின. போட்டியை இந்தியா நடத்துகிறது என்றாலும், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த உலகக் கோப்பை நீண்டதாக இருக்கப் போகிறது. அதாவது, மொத்த ஆட்டத்தின் காலம் 29 நாட்களுக்கு இருக்கும். இதில் 16 அணிகள் 45 ஆட்டங்களில் எதிர்கொள்ளும். முதலாவது ஆட்டம் அக்டோபர் 17ஆம் தேதி துபாயில் தொடங்கியது. ஆடும் அணிகள் இந்தியாவும் – பாக்கிஸ்தான் என்பதால் இரண்டு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பு… பரபரப்பு… தீவிரமான பயிற்சிகள்… விசேஷ பிரார்த்தனைகள்…  போன்றவை இரண்டு நாடுகளிலும் ரசிகர்களை ஆர்வத்தின் விளிம்பில் நிறுத்தியிருந்தன.
ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்திய அணியைப் பாகிஸ்தான் வென்றதில்லை. தொடர்ச்சியாக உலகக் கோப்பைத் தொடர்களில் 12 முறை இந்தியாவிடம் தோற்ற அணி அது. ஆனாலும் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தது. காரணம், விராட் கோலி டி20 விளையாட்டு அணித் தலைவராக வழி நடத்தும் கடைசித் தொடர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்குக் கடைசித் தொடர், ஒரு ஆலோசகராகத் தோனிக்கு முதல் தொடர், இப்படி இத்தொடரில் இந்தியாவுக்குப் பல அழுத்தங்களும் இருந்தன.
இத்தகைய சூழலில்தான், போட்டி நாள் வந்தது. விராட் கோலி டாஸை சுண்டினார்; பாகிஸ்தான் அணித்தலைவர் வென்றார்; பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
அந்தப் புள்ளியிலிருந்து ஆட்டம் முடியும் வரை, பாகிஸ்தானே முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முடிவில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது பாகிஸ்தான்.
உலகக்கோப்பை டி20 வரலாற்றிலேயே 150 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை துரத்தி ஒரு விக்கெட் கூட இழக்காமல் வென்ற முதல் அணி பாகிஸ்தான் தான். இது, இந்திய அணிக்கு மட்டுமில்லை, உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்குப் பேரிடி. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் எப்படி ஒரு அணி தோற்றது என்பது வரலாறாகும் ஒரு விஷயம். அந்த அளவில் இது இந்தியாவின் படுதோல்வியாகப் பதிவாகியிருக்கிறது.
போட்டிகள் தொடங்கு முன்னர் வலுவான அணியாகக் கருதப்பட்டு எளிதாக வெல்லும் என்று கருதப்பட்ட இந்தியா தோல்வியடையக் காரணங்கள் எவை பார்ப்போமா?

அதிர்ஷ்டம்

கிரிக்கெட்டில் டாஸ் மிக முக்கியமானது.
டாஸில் வென்றவுடனேயே அணித் தலைவர் பாபர் ஆசம், தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் ஏற்படுத்த முயல்வோம் என்றார். அதைத்தான் செய்தார். பிட்ச்சில் இருந்த பனித்துளிகளும் அவர்களின் முடிவுக்கு உதவியது. ஆட்டம் தொடங்கும் முன்னரே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டாஸ் என்பது உங்கள் கையில் கிடையாதல்லவா என்றார்.

அஃப்ரிடியின் அதிரடி

பாகிஸ்தான் அணிக்கு எப்போதுமே ஐசிசி தொடர்களில் சிம்மசொப்பனமான வீரர்களில் ஒருவர் ரோகித் ஷர்மா. ஆனால், அவருக்குச் சிம்மசொப்பனமாக விளங்குபவர்கள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் தான். அன்றைய ஆட்டத்தில் ரோகித் தனது கணக்கைத் துவங்க ஆரம்பிக்கும் முன்னரே, அதாவது அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிடில் ஸ்டம் பறக்க வீசிய யார்க்கருக்கு ரோகித்தின் விக்கெட் பலியானது.
எப்போதும் கிரிக்கெட்டில் முதல் விக்கெட் விழ்த்தப்படுவது என்பது ஒரு குறியீடு. இழந்த அணி ஆட்டத்தின் திட்டங்களை மாற்றியமைக்கும்,  வென்ற அணி நம்பிக்கையுடன் களமிறங்கும். ரசிகர்களின் ஆரவாரம் இங்கு ஆரம்பித்துவிடும். முதல் ஓவரிலேயே களமிறங்கிய அணித்தலைவர் கோலி, ஒருபுறம் இடது கை வேகப்பந்து வீச்சாளரை வைத்து விக்கெட்டைத் தகர்க்க மறுபுறம் அவருக்குத் துணையாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் சூழல் வலை அமைத்து ஆடிய பாக்கிஸ்தான் அணியின் வியூகங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார்.
பாக். அணி தலைவர் ஷாஹீன்  ஓவரின் முதல் பந்திலேயே இரையானார் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல்.
ஆறு ரன்களுக்கு இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
தொடர் விக்கெட்கள் இழப்பு என்பது இழந்த அணியின் மனஉறுதியைக் குறைக்கும். மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. இந்திய ரசிகர்களுக்குப் பேரிடி.

சூப்பர் சொதப்பல்கள்

எதிரணி வெறியுடன் வெற்றி இலக்கை நோக்கி நகரும் போது தன்னைக் காத்துக்கொள்ள ஆடும் அணி மிகத் திறமையான வியூகங்களை வகுக்கும். ஆனால், கோலி தவறிவிட்டார், தவறான மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்கள் மிக மோசமாகச் சொதப்பினார்கள். முதல் நான்கு ஓவர்களில் வீரர்களால் அவுட் ஆகாமல் தப்ப முடிந்ததே தவிர, ரன்களைக் கூட்ட முடியவில்லை. அந்தக்கட்டத்தில் கூட ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ஷர்துல் தாக்கூர், அனுபவ வீரர் அஷ்வின் கோலியால் ஆட அழைக்கப்படவில்லை.
அந்தக் கட்டத்திலேயே அனுபவம் மிகுந்த ரசிகர்கள் இந்தியா
தோற்கப்போவதைக் கணித்தார்கள்.

செம வெற்றி

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அசைக்க முடியாமல் தவிக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

அடுத்த வாய்ப்பு

இம்மாதிரித் தொடரில் முதல் ஆட்டத்தில் தோற்ற ஆணி, தங்கள் முன்னுள்ள அடுத்த வாய்ப்புகளை ஆராய்ந்து வியூகம் வகுக்கும்.
இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் உள்ளது. இன்னும் ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த நான்கில் இன்னும் ஒரு தோல்வி ஏற்பட்டால் கூட இந்திய அணியின் அரை இறுதி கனவு மங்கிவிடும் வாய்ப்புண்டு.
இத்தகைய சூழலில் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. மறுபுறம் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை நெருங்க முதல் அடியை வெற்றிகரமாக எடுத்துவைத்துவிட்டது.
கிரிக்கெட் கனவான்களில் விளையாட்டு என்று வர்ணிக்கப்படுவது உண்டு. ஆனால், டி 20 ஆட்டங்களில் வெற்றிகளைப் பெற அதிர்ஷ்டம் மிகுந்த கனவான்களாக இருக்க வேண்டும்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com