பிரம்மஹத்தி தோஷமும் நிவர்த்தியும்!

பிரம்மஹத்தி தோஷமும் நிவர்த்தியும்!
Updated on

– எ.எஸ்.கோவிந்தராஜன்

ருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும்,
குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து பார்வை செய்தாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். இந்த தோஷம் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொதுவானது. சரி, ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது என்பதைக் காண்போம்.

பிரம்மன் படைத்த ஒரு உயிரைக் கொல்வதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிட்டாலும் இந்த தோஷம் ஏற்படும், முற்பிறவிகளில் ஆலயத்தைத் தகர்த்தல், சாமி சிலைகளைத் திருடுதல் போன்றவற்றால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகிறது.

ஏதேனும் பொருளுக்கோ, பொன்னிற்கோ ஆசைப்பட்டு ஒரு உயிரை வதம் செய்வதால் இந்த தோஷம் ஒருவரைப் பற்றிக்கொள்ளும். மேலும், பெற்றோர்களை கவனிக்காமல் விட்டுவிட்டாலும் இந்த தோஷம் ஒருவருக்கு ஏற்படும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான பரிகாரம் செய்யாதவரை அது அவர்களது தலைமுறைகளையும் தொடரும்.

அந்த வகையில், பிரம்மனின் தலையை கொய்தமையால் பைரவருக்கும், மகிஷாசுரன் எனும் அரக்கனை கொல்வதற்கு துணை நின்றமையால் சப்த கன்னியருக்கும், ராவணனைக் கொன்றதால் ஸ்ரீராமருக்கும், அந்தணனைக் கொன்றதால் வீரசேனன், வரகுண பாண்டியன் ஆகியோருக்கும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

னி, பிரம்மஹத்தி தோஷத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காண்போம்.

பிரம்மஹத்தி தோஷம் உடைய ஜாதகர்கள் வாழ்வில் நிம்மதி இருக்காது. தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் அவர்களைத் துன்புறுத்தும். இந்த தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணத் தாமதம் ஏற்படும். கல்வி, வேலை மற்றும் குழந்தைப்பேற்றில் பிரச்னைகள் உண்டாகும். அதிக அளவில் கடன்கள் ஏற்படும். தேவைக்கதிகமாக சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது. உறக்கத்தில் கனவுத் தொல்லைகள், செய்தொழிலுக்கான பணியாளர்கள் கிடைக்காமை, மனதில் குழப்ப நிலை போன்ற பல தொல்லைகள் இருந்து வரும். நல்லறிவு, நல்ல பழக்க வழக்கங்கள், கடின உழைப்பு இருந்தும் அதற்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போகும்.

டுத்ததாக, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கான சில பரிகாரங்களைக் காண்போம்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியே வர வேண்டும். அங்கே அதற்குரிய யாகம் நடத்த வேண்டும். இது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.

பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு, ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனிதத் தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வந்தாலும் பலன் பெறலாம்.

அமாவாசை தினத்தன்று மாலை சிவன் கோயிலுக்குச் சென்று ஒன்பது சுற்றுகள் சுற்றி வணங்கி வர வேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றி வந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகமும் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

பழைமையான சிவன் கோயில்களின் அனைத்து சன்னிதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு தீபமேற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

ராமேஸ்வரம் கடலில் நீராடி, அத்திருத்தலத்தின் அனைத்துத் தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி, மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோயில் தீர்த்தத்தில் நீராடி அத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை அருகில் வில்வராணி எனும் ஊரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நற்பலனைப் பெறலாம்.

இவை தவிர தஞ்சை மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வர்
திருக்கோயில், நாகை மாவட்டம், வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில், கோவை மாவட்டம், மஞ்சநாயக்கனூர் அமணீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கர்நாடகா மாநிலம்,
குக்கி சுப்ரமண்யா திருக்கோயிலுக்குச் சென்று,

'ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே|
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ|
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன்|
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்'

எனும் ஸ்லோகத்தைச் சொல்லி இறைவனை வணங்கி வழிபடுவதன் மூலம் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பெறலாம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com