ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி துளிகள்!

ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி துளிகள்!
Published on

– எஸ்.ராஜம்

* சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திரயோதசி தினமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த நாளாகும். ஸ்ரீ நரசிம்மரின் நட்சத்திரம் சுவாமி ஆகும்.

* ஸ்ரீ நரசிம்மர் தசாவதாரங்களில் யோக நிலையில் காட்சி அளிக்கிறார். வைணவ நூல்களில் யோக நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்ற வடிவங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

* பொதுவாக, கோயில்களில் நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் வடிவங்களே மூலவராகக் காட்சி தரும். புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் உள்ள சிங்ககிரி கோயிலில் உக்கிர நரசிம்மர் மூலவராக தரிசனம் தருகிறார்.

* தஞ்சாவூர், மாமணிக்கோயிலில் சிம்ம முகத்துடன் நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

* ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் எட்டடி உயரத்தில் மகாலட்சுமியை தனது மடியில் அமர வைத்து, அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.

* சிங்கப்பெருமாள்கோயிலில் மூலவர் நரசிம்மர் விலையுயர்ந்த கற்களால் உருவாக்கப்பட்டவர். அதனால் வஸ்திர கவசம் சாத்தப்பட்டுள்ளது. இங்கு உத்ஸவர் பெயர் பிரகலாதவரதன். தாயாரின் பெயர் அகோபிலவல்லித் தாயார். மூலவர் நரசிம்மர் மூன்று கண்களுடன் அருள்பாலிக்கிறார்.

* நாகப்பட்டினம் நீலமேகப் பெருமாள் கோயிலில் அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச் சிலை உள்ளது. இவரது ஒரு கரம் பிரகலாதனின் தலையைத் தொட்டவாறும், மற்றொரு கரம் அபய ஹஸ்தத்துடனும் திகழ, மற்ற கரங்கள் இரண்யனை வதம் செய்வது போலும் திகழ்கின்றன.

* கோவை மாவட்டம், தாளக்கரையில் உள்ள நரசிம்மர் கோயிலில் நரசிம்ம பெருமான் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு நரசிம்ம பீடத்தில் சக்கரமும் அர்த்த மண்டபத்தில் சாளக்ராமமும் உள்ளன. முதலில் இந்த சாளக்ராமமே நரசிம்மராக வழிபடப்பட்டதாம். அதனால் இதை ஆதிநரசிம்மர் என்கிறார்கள். இந்தக் கோயிலில் தரப்படும் எலுமிச்சை மற்றும் துளசி தளத்தை வீட்டில் வைத்துப் பூஜித்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com