
– முத்து.இரத்தினம்
புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. 'கன்னியர் கோயில்' என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். கோயிலில் உட்புறம் 15 கன்னியர்களின் சிலைகள் வரிசையாக அமைந்துள்ளன. கருவறையில் மூலவராக பச்சைவாழி அம்மன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் உருவானதற்கான காரணம் மிகவும் வியப்புக்குரியது.