அதிஅற்புத ஆஞ்சநேயர் கோயில்கள் 5!

ஜனவரி 11 அனுமன் ஜெயந்தி!
அற்புத ஆஞ்சநேயர் ...
அற்புத ஆஞ்சநேயர் ...

1. தங்ககவசத்துடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்.

அபயஹஸ்த ஆஞ்சநேயர்
அபயஹஸ்த ஆஞ்சநேயர் m.dinamalar.com

சேலம் ராசிபுரம் கச்சேரி தெருவில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 3 நாட்களாக நடக்கும். இதையொட்டி முதல் நாளில் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம், வெண்ணை சாற்று நடக்கும். வெண்ணை அலங்கார தரிசனம், ஸ்ரீராமர் பாதம், நவமாருதி திருமஞ்சனம் நிகழ்ச்சிகளும் நடக்கும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை பயபக்தியுடன் வணங்குவார்கள். அப்போது தங்க கவச அலங்காரத்தில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது இங்கு மட்டுமே கிடைக்கும் அற்புத தரிசனம்.

தூது சென்ற ஆஞ்சநேயரின் வீரதீர பராக்கிரமம் இந்தக்கோயிலில் முக்கியமாகச் சிறப்பிக்கப்படுகிறது.  வெளியிலேயே கோபுரத்தின் பக்கவாட்டில் வாலில் ஆசனம் அமைத்து அமர்ந்த திருக்கோலத்தில் கம்பீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

2. மஞ்சள் அரைத்து வழிபடும் ஆஞ்சநேயர் கோயில்.

விஸ்வரூப ஆஞ்சநேயர்
விஸ்வரூப ஆஞ்சநேயர்m.dinamalar.com

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது அழியாநிலை எனும் ஊர். இங்கு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. விஸ்வரூப ஆஞ்சநேயர் 2 அடி பீடத்தின் மீது 9 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். திருமணத் தடையில் தவிக்கும் பெண்கள் இங்கு மூல நட்சத்திர த்தன்று வந்து கோயில் அர்ச்சகர் தரும் மஞ்சளை வாங்கி இங்குள்ள அம்மியில் அவர்கள் கையால் அரைக்க வேண்டும்.

பின்னர் அந்த அரைத்த மஞ்சளை மீண்டும் அர்ச்சகரிடமே கொடுத்து ஆஞ்சநேயருக்கு அதைக்கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும். மறுநாள் கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயருக்குச் சாத்தப்பட்ட அதே மஞ்சளை அர்ச்சகரிடமே கேட்டு வாங்கிகொள்ள வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை இதே வேண்டுதலை செய்தால் பெண்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. விஷேச நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்கிறார்கள்.

3. வால் இன்றி காட்சி தரும் அதிசய அபய ஆஞ்சநேயர்.

அபய ஆஞ்சநேயர்
அபய ஆஞ்சநேயர்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் மேற்கு வாசலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததும் ஆகும். இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் சுயம்புவாக கடல் மண்ணினால் கடல் சிப்பிகள் கலந்த உருவத்துடன் ஆன சிலையாக இருக்கின்றார். அவருடைய பலம் வாய்ந்த வால் இன்றி காட்சி தருகின்றார்.

இங்கு இவரே பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் எவரும் இல்லை. இந்த  ஆஞ்சநேயரிடம் வேண்டினால், புத்திர பாக்கியம் கிட்டும் என்பதும், பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் மனக்குழப்பங்கள் நீங்கி, குடும்ப ஒற்றுமை சீரடையும் என்பதும் நம்பிக்கை. மூலஸ்தானத்தில் வால் இன்றி ஒரு ஆஞ்சநேயரும், மற்றொரு ஆஞ்சநேயர் முழு உருவத்துடனும் கம்பீரமாக காட்சி தருகின்றார். இவருக்கு அபய ஆஞ்சநேயர் என்ற பெயர் சூட்டி அழைக்கின்றனர்.

இங்கு அத்திமரத்திலே உருவான ஆஞ்சநேயர் உள்ளார். இவருக்கு வருடத்தில் மூன்று நாட்கள் - அனுமன் ஜெயந்தி, புரட்டாசி கடைசி சனிக்கிழமை, ஆனி ரேவதி நட்சத்திர நாட்களில் மட்டுமே திருமஞ்சனம் நடக்கும். இக்கோயிலில் இருக்கும் தல விருட்சமான அத்தி மரத்தில் இளநீரை கட்டி ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்கின்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. உக்கிரமடைந்து சிவலிங்கத்தை உடைக்க முயன்ற ஆஞ்சநேயர் என்பதால் இவரை குளிர்விக்கும் விதமாக இவ்வாறு இளநீர் கட்டி வைத்து வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் வேறு இளநீர் வாங்கி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

4. தீமிதி விழா காணும் ஆஞ்சநேயர்

மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில்
மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல்லிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில், இந்த கோயில் அமைந்துள்ள மெட்டாலா கணவாயில்,  ஒரு காலத்தில் வனவிலங்குகள் உலவும் வனமாக இருந்தது. இப்பகுதியில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டவுடன் தற்போது அழகான திருத்தலமாக மாறிவிட்டது

தமிழகத்திலேயே தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில் இதுதான் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில், கடைசி ஞாயிறு அன்று பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.

5. சிவனின் எதிரே ஆஞ்சநேயர்

வாலீஸ்வரர் ஆலயம்...
வாலீஸ்வரர் ஆலயம்...

சென்னை புத்தூர் நெடுஞ்சாலையில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் இடையிலும், திருவள்ளூரிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவிலும் உள்ளது திருக்காரிக்கரை. இது ஆந்திர மாநில எல்லையில் உள்ளது.

இங்குள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் வாலீஸ்வரர், காலபைரவர் என இரு சன்னிதிகளில் இறைவன் அருள்பாலிக்கிறார். இது ஆஞ்சநேயர் வழிபட்ட சிவத்தலமானதால் வாலீஸ்வரர் முன் நந்திக்கு பதில் ஆஞ்சநேயரே வீற்றிருக்கிறார். ஆஞ்சநேயர் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்யும் சைகையில் இருக்கிறார். இப்படிப்பட்ட சிவன் கோயில் வேறு எங்கும் இல்லை. இங்கு மார்கழி பிரதமையில் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com