இந்த ஆண்டின், வசந்தத்தை வரவேற்கும் சைத்ரா நவராத்திரி காலத்தில் (30 மார்ச் முதல் ஏப்ரல் 7 ஆம் நாள் வரை) இந்தியாவில் தரிசிக்க வேண்டிய 9 புகழ் பெற்ற துர்கா தேவியின் ஆலயங்கள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆன்மிக யாத்திரை செல்வோருக்கு மிகப் புனிதமான இடமான இக்கோவில் ஜம்முவில் 'திரிகூட' மலை மீது அமைந்துள்ளது. இக்கோவிலை சென்றடைய 12 கிலோ மீட்டர் தூரம் கடினமான மலையேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இக்கோவில், பார்வதியின் ஓர் அவதாரமான காமாட்சி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் தனித்துவமான கட்டிடக் கலையம்சமும் அமைதியான சூழ்நிலையும், தென் இந்தியாவில் ஆன்மிக யாத்ரீகர்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் அற்புதமான ஆலயமாக இதை ஆக்கியுள்ளது.
அசாமில் உள்ள இந்தக் கோவில் மிகப் புனிதமானதொரு சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. காமாக்யா தேவியின் அருளைப் பெற உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் இங்கு வருகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் அதிகம். வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் அம்புபாச்சி மேளா என்ற திருவிழா இங்கு மிகப் பிரபலம். வருடத்திற்கு ஒரு முறை வரும் காமாக்யா தேவியின் மாதவிடாய் சுழற்சியை கொண்டாடும் திருவிழாவே அம்புபாச்சி மேளாவாகும்.
வேண்டுவோற்கு வேண்டும் வரம் தருபவள் மானசா தேவி. இக்கோவில் ஹரித்வாரில் உள்ளது. வாழ்வில் வளம், நல்ல ஆரோக்கியம் பெற பக்தர்கள் இங்கு கூடுகின்றனர்.
பக்தர்களை இரட்சிப்பவளான தந்தேஸ்வரியின் கோவில் சட்டிஷ்கரில் பாஸ்டர் பகுதியில் உள்ளது. முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்று. சதி மாதாவின் பற்களில் ஒன்று விழுந்த இடம். சக்திவாய்ந்ததொரு ஆன்மிகத் தலம்.
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது. அம்பாள் காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ஆன்மிக ரீதியில் பரிசுத்தமான புனிதராகிய ராமகிருஷ்ண பரம ஹம்சருடன் தொடர்பில் இருந்ததால் இக்கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் திகழ்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. துர்கா தேவியின் பயமுறுத்தும் தோற்றத்தை கொண்டவள் சாமுண்டீஸ்வரி. இக்கோவில் வளாகத்தில் நின்று பார்க்கும் போது மைசூரின் மொத்த அழகையும் பார்க்க முடியும்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள காங்ரா பள்ளத் தாக்கில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இது பூமியிலிருந்து வெளிப்படும் முடிவில்லாத அக்னியின் தோற்றத்தை காட்டுவதாக உள்ளது. சதி மாதாவின் நாக்கு இவ்விடத்தில் விழுந்து வெடித்து நெருப்பாய் தோன்றியதாக புராணம் கூறுகிறது. நவ ராத்திரி விழாவின் போது பக்தர்கள் மில்லியன் கணக்கில் இங்கு வந்து செல்கின்றனர்.
இமாச்சல் பிரதேசத்தின் அழகிய மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பக்தர்களின் கவலைகளை நீக்கி அவர்கள் விருப்பங்கள் அனைத்தையும் தவறாது நிறைவேற்றி வைப்பவள்.நவ ராத்திரி விழாவின் போது ஜொலிக்கும் இக் கோவிலின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.