ஆன்மீகக் கதை: சிறுவன் ரூபத்தில் வந்தது பெருமாளே! யாரும் இல்லாதவருக்கு அவரே துணை..

Tamil aanmeega kathai
Spiritual story: The mercy of PerumalCredits: AI Image
Published on
deepam strip
deepam strip

ரு ஏழைப் பிராமணன் கங்கை கரையோரம் வசித்து வந்தான். தினமும் கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவ்ருத்திக்குச் செல்வான். கிடைத்ததை உணவாக சமைத்து பகவானுக்கும் படைத்து, அவன், அவன் மனைவி இருவரும் சாப்பிடுவது வழக்கம். வழக்கம் போல் அன்று கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தில் யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்ற இடம் வந்தபோது, "அத்தனை பேர் கஷ்டத்தையும் நானே ரக்ஷிக்கிறேன் என்கிறாரே! இது எப்படி சாத்தியம்? கோடானு கோடி மக்களின் கஷ்டங்கள் ஒவ்வொன்றையும் பகவானால் எப்படி தீர்க்க முடியும். இது பிடிபடாததாக உள்ளது. உலகில் பல இடங்களில் யாரையாவது நியமித்து கஷ்டத்தைப் போக்குவானா? இவன் ஒவ்வொருவரின் கஷ்டத்தை எப்படி அறிய முடியும்? இது சரியாக விளங்கவில்லை." தனக்கு நேர்ந்த சந்தேகத்தால் x என்ற குறியீட்டை அந்த சுலோகத்தில் மீது வைத்து புத்தகத்தை மூடினான்.

உஞ்சவ்ருத்திக்கு வழக்கம் போல் புறப்பட்டுப் போனான். புறப்பட்ட அவனுக்கு அன்று போதாத காலம், எங்குமே பிக்ஷை கிடைக்கவில்லை. இவர் தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்த சமயம், ஒரு சிறு பிராமண பையன் இந்த பிராமணன் வீட்டுக்கதவைத் தட்டி ஒரு பெரிய மூட்டையை இறக்கி வைத்தான்.

பிராம்மணன் மனைவி அவனை, "நீ யார் ஏன் இதெல்லாம் கொண்டு வந்து இறக்குகிறாய்? நீயாரென்று எனக்குத் தெரியவில்லை. என் கணவர் இதையெல்லாம் சம்மதிக்கமாட்டார். நீ யாரென்றே தெரியாமல் இந்தப் பொருள்களை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். இதையெல்லாம் எடுத்துக் கொண்டுபோ!" என்றாள்.

மூட்டையில் அரிசி, பருப்பு, நெய் போன்ற நிறைய மளிகை சாமான்கள் இருந்தன. உடனே சிறுவன், "நான் வருவது குருநாதருக்குத் தெரியும். இதோ பாருங்கள் நான் மூட்டையை மெதுவாக தூக்குகிறேன் என்று என் முதுகில் அடித்திருக்கிறார். அதனால் என் முதுகில் ஏற்பட்ட காயத்தைப் பாருங்கள்" என முதுகைத் காட்ட அதில் x என்று அவள் கணவன் அடித்த அடையாளம் இருந்தது‌. மிகச் சிவந்திருந்த அந்த குறியீட்டைப் பார்த்து அதிர்ந்த பிராம்மணனின் மனைவி, "இந்த சிறுவனை இப்படியா பிரம்பால் அடிப்பது?" என வருந்தியவள் கணவன் வரவிற்காக காத்திருந்தாள். காயம் பட்ட சிறுவனுக்கு எண்ணை தடவி உள்ளே சென்று படுக்கும்படி கூறினாள்.

மனம் வருந்திய அவள் தன் கணவன் வீடு திரும்பியதும் அவனிடம், "நீங்கள் உங்கள் சிஷ்யனை இப்படியா அடிப்பது?" என கோபிக்க,

"அவர் தனக்கு அப்படி ஒரு சிஷ்யன் இல்லை என்றும், தான் அடிக்கவும் இல்ல" என்று கூறி விவாதித்தார். இருவரும் வீட்டில் இருக்கும் சிறுவனை தேட, சிறுவனைக் காணவில்லை. எண்ணெய் தடவி உள்ளே படுக்கப் சொன்ன சிறுவன் எப்படி மாயமானான்? உடனே பிராமணனுக்கு இது பெருமாள் லீலை என புரிந்தது. மேலும் பெருமாளே சிறுவன் ரூபத்தில் வந்து தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததைப் புரிந்து கொண்டார்‌.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: அன்னம் வழங்க ஈசன் அளித்த அட்சய பாத்திரம்!
Tamil aanmeega kathai

உடனே தன் பகவத்கீதை புத்தகத்தை திறந்து பார்த்ததில் அவர் இட்டிருந்த x குறியீடு காணாமல் போனது‌ பார்த்து தன் சந்தேகத்தை தெளிவு செய்த பெருமாள் குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

பெருமாள் எப்படி அனைவருக்கும் படி அளிக்கிறார்(The mercy of Perumal) என்பதை இவருக்குப் புரிய வைக்க மூட்டை தூக்கிய சிறுவன் வடிவின் வந்து தனக்கு உதவி செய்ததை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com