ஆதிசங்கராச்சாரியார் கோவில் ஸ்ரீநகர் காஷ்மீர்!

ஆதிசங்கராச்சாரியார் கோவில் ஸ்ரீநகர் காஷ்மீர்!
Published on

காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் வழிபட்ட கோவில் உள்ளது . ஜம்மு அண்ட் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் உள்ள டால் லேக் கரையில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 240 படிக்கட்டுகள் உள்ள இந்த கோவிலை மலையேறி இங்குள்ள சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு . இங்கு சிவபெருமான் சிவலிங்க வடிவில் மிகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இதனை ஜோதீஷ்வரர் கோவில் என அழைக்கின்றனர். இக்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இமயமலையில் உள்ள தலங்களுக்கு ஆதிசங்கரர் சுற்றுப்பயணம் செய்த போது ஸ்ரீநகரில் உள்ள இந்த கோவிலுக்கும் சென்று சிவலிங்கத்தை தரிசித்துள்ளார் . அத்துடன் சௌந்தர்யலஹரி என்னும் அம்பாள் ஸ்தோத்திரப் பாடலை இக்கோவிலில் தான் பாடியுள்ளார்.

டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங் 1846-1857 காலத்தில் ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலைக் கோயிலுக்கு செல்ல படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 1961இல் துவாரகை மடாதிபதி கோவில் கருவறைக்கு முன் ஆதிசங்கரருடைய பளிங்குக்கல் சிலையை நிறுவியுள்ளார். 1925 ஆம் ஆண்டு கோவிலுக்கு மின்சாரம் கிடைத்தது ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக மூல ஜோடிகளை தேடி காஷ்மீரத்தின் சாரதா பி இடத்திற்கு சென்றவர் கோபாத்திரி மலையில் உள்ள சிவபெருமானை தரிசித்து சௌந்தர்யலஹரி என்னும் அம்பானியின் தோத்திரப் பாடலை பாடியுள்ளார் என்பது வரலாறு.

காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் தரிசித்த சிவபெருமானே கும்பிடும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com