1000 ஆண்டுகள் பழைமையான ஆச்சரியமிக்க ஆவல்நத்தம் குகைக்கோயில்!

ஆவல்நத்தம் பசுவேஸ்வரர் கோயில்
ஆவல்நத்தம் பசுவேஸ்வரர் கோயில்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆவல்நத்தம் திருத்தலத்தில் அமைந்துள்ளது காசீஸ்வரர் திருக்கோயில்.19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த குகைக்கோயில் ஆகும். இக்கோயில் ஒரு பாறையின் கீழ் இயற்கையாக அமைந்த குகையில் குடையப்பட்டு அமைந்திருப்பது சிறப்பு.

இந்தக் கோயில் பாறையின் கீழ் அமைந்துள்ள காரணத்தால் விமானம், துவார பாலகர்கள் போன்றவை காணப்படவில்லை. குறுகிய சுரங்கம் போல் குடையப்பட்ட வாயில் வழியே உள்ளே நுழைந்து சென்றால் உள்ளே மிகவும் விஸ்தாரமான கோயிலாக உள்ளது. குகையின் உள்ளே ஈசனின் கருவறை உள்ளது. ஒரே கருவறையில் காசீஸ்வரரும், விசாலாட்சி அம்பிகையும் உள்ளனர். இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

காசீஸ்வரர் கோயிலுக்கு அருகில் பசுவேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குகைக்கோயில் இல்லை. இது ஒரு கட்டுமான கோயிலாகும். இக்கோயிலில் மூலவரான பசுவேஸ்வரரின் கீழ் சுயம்பு லிங்கம் ஒன்று காணப்படுகிறது. இக்கோயிலுக்கு அருகில் தீர்த்தக் குளம் ஒன்றும், காசி தீர்த்தம் என்னும் குளம் ஒன்றுமாக சேர்ந்து இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. கோயிலின் பின்புறத்தில் வற்றாத நீரூற்று ஒன்றுள்ளது. இந்த நீரைத்தான் காசிக்கு இணையான தீர்த்தமென்று கூறுகிறார்கள்.

காசி தீர்த்தத்துக்கு இணையான வற்றாத தீர்த்தத்தை கொண்ட இக்குளத்தில்  மக்கள் குளித்து இறைவனை தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற தினங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. அன்று சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் போன்றவையும் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் நேர்மையாக இருப்பதன் பயன் என்ன தெரியுமா?
ஆவல்நத்தம் பசுவேஸ்வரர் கோயில்

இக்கோயில் குளத்தில் மூன்று வாரம் தொடர்ந்து குளித்து இறைவனை வழிபட, வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இக்கோயில் சிவனுக்கு எதிரில் அமைந்துள்ள நந்தி சுயம்புவாகும். சுயம்புவுக்கு மேலேயே வேறொரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பசுவேஸ்வரர் என சிறப்பித்துக் கூறப்படும் நந்தி பகவானிடம் மாடு கன்றுகள் நோய் நொடின்றி இருக்க வேண்டி நிறைய மாடு பொம்மைகள் இங்கு சுவர் முழுதும் வைக்கப்பட்டுள்ளது. காசீஸ்வரர் கோயிலுக்கு அருகில் பசுவேஸ்வரர் மற்றும் முருகன் கோயிலும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com