அம்மாவின் மனைவியை எப்படி அழைப்பது?

அம்மாவின் மனைவியை எப்படி அழைப்பது?
Published on

- கே.சூரியோதயன்

ரு சமயம் அப்பய்ய தீக்ஷிதர் தஞ்சை ஸ்ரீ ப்ருஹதீச்வரர் ஆலயத்தின் பிரம்மோத்ஸவ விழாவுக்குச் சென்றிருந்தார். அங்கே தாதாசாரியார் உள்ளிட்ட பல வித்துவான்கள் வந்திருந்தனர். உத்ஸவம் முடிந்ததும் அப்பய்ய தீக்ஷிதர் மற்றும் தாதாசாரியார் அவர்களை மட்டும் சில நாட்கள் தம்மோடு இருந்துவிட்டுப் போகும்படி வேண்டிக் கொண்டார் தஞ்சை மகாராஜா. அந்த இரு வித்வான்களோடு மகாராஜா பல க்ஷேத்ரங்களை தரிசித்துக் கொண்டு வரும்போது, ஒரு கோயிலில் ஹரிஹர புத்திரரான சாஸ்தா முகவாய்க்கட்டையின் மீது தனது வலது கை ஆள் காட்டிவிரலை வைத்துக் கொண்டு காட்சி தருவதைக் கண்டார்.

இக்காட்சியைக் கண்டு பரவசப்பட்ட மகாராஜா, அந்த சாஸ்தா விக்ரகம் ஆழ்ந்த யோசனையில் இருப்பதற்கான காரணத்தை அதை அந்த கிராமத்து மக்களிடம் கேட்டான். அந்த கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஒருவர், “அரசே… இந்த சாஸ்தா எங்கள் குலதெய்வம். ‘ஒரு மஹாபுருஷன் இங்கு வருவார். அவர் இந்த சாஸ்தாவானவர் இம்மாதிரி இருப்பதின் கருத்தை விளக்குவார். அக்கருத்தைக் கேட்டு மகிழ்ந்து சாஸ்தாவானவர் முகவாய்க்கட்டையினின்றும் தனது விரலை எடுப்பார்’ என்று எங்கள் மூதாதையர் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த மகாபுருஷரை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்.

இதனைக் கேட்ட அரசன் அருகில் இருந்த தாதாசாரியாரிடம், “இந்த சாஸ்தா கோலத்துக்கான காரணத்தை நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

உடனே தாதாசாரியார், “நான் விஷ்ணுவுக்கு மோஹினி ரூபமாய் இருந்தபொழுது பிறந்தவன்; விஷ்ணுவின் புதல்வன். பிரம்மாவுக்குச் சமமானவன். எனவே, நான் மிகச் சிறந்தவன். தேவர்கள் என்னைப் போற்றி வாழ்த்துகின்றார்கள். ஆனாலும், சுடுகாட்டில் வாழும் பூத கணங்கள் சூழ்ந்த பரமசிவனின் பிள்ளை என்றும் பூத கணங்களால் சூழப்பட்டவன் என்றும் பலரும் சொல்லுகிறார்கள் எனும் வருத்தத்துடன் சாஸ்தா இருக்கிறார்” என்று தாதாசாரியார் விளக்கம் கூறினார். இந்த விளக்கத்தினால் சாஸ்தாவின் கோலத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தாதாசாரியாரின் விளக்கமும் பயனற்றுப் போனது.

டுத்ததாக மகாராஜா, அப்பய்ய தீக்ஷிதர் பக்கம் திரும்பி, “ஐயா… தாங்களாவது இந்த ஹரிஹரபுத்திரரின் உண்மையான் அப்பிராயத்தை தயவு செய்து விளக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். மகாராஜாவின் வேண்டுகோளுக்கிணங்கி அப்பய்ய தீக்ஷிதர் விளக்கத் தொடங்கினார்.

“நான் மோஹினி அவதாரம் செய்த விஷ்ணுவுக்கு பரமசிவனுடைய குமாரனாவேன். ஆகையால், கயிலாஸம் சென்று தந்தையை தரிசிக்கும்பொழுது பார்வதி தேவியைக் கண்டு அம்மா என்று அழைப்பேன். தந்தையாரின் மனைவிகள் அனைவரும் குழந்தைக்குத் தாய் முறை அல்லவா? ஆனால், நான் வைகுண்டம் சென்றால் அங்கு என் தாயான மஹாவிஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியை (தாயாரின் மனைவியை) என்ன முறை சொல்லி அழைப்பது? என்று புரியாத கோலத்தில் வீற்றிருக்கும் அந்த சாஸ்தாவை வணங்குகிறேன்” என்று கூறினார்.

வ்வாறு தீக்ஷிதர் கூறியதும் சாஸ்தா தனது வலக்கரத்தின் விரலை முகவாய்க்கட்டையினின்று விலக்கினார். தீக்ஷிதர் அவர்களின் வினயமும், தெய்வ நம்பிக்கையும் ஸ்ரீசாஸ்தாவினிடம் உள்ள பக்தியும் அதில் வெளிப்பட்டது. தாதாசாரியார் சிவபெருமானை இகழ்ச்சியாகக் கூறியது போல, தீக்ஷிதர் இங்கு விஷ்ணுவை இகழ்ச்சியாகக் கூறாமல், ஸ்ரீசாஸ்தாவின் உள்ளக் கருத்தை கூறியதோடு, அந்த சாஸ்தாவை வணங்குகின்றேன் என்று கூறியது தீக்ஷிதரின் பக்தியைக் காண்பிக்கின்றது. சாஸ்தா விக்ரஹம் கைவிரல் எடுத்த ஆச்சரியத்தையும், ஸ்ரீமத் தீக்ஷிதர் அவரகளது ஸத்திய வாக்கினையும் அரசனும், மற்றையோரும் கண்டு ஆனந்தம் அடைந்தார

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com