
-பொன்னம்மாள்
கன்னோசியை ஆண்ட அரசர், தமக்குக் குழந்தை பிறக்கும் சமயம் ஜோதிட வல்லுநர்களை அழைத்து, குழந்தையின் சரியான ஜாதகத்தைக் கணிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். எண்பது வயதுக் கிழவர் முதல் ஒன்பது வயதுச் சிறுவன் மிகிராகுலன் வரை அந்த ஜோதிட கணிப்பு தொகுப்பில் இருந்தனர்.
குழந்தையின் தலை தெரிந்ததும் ஒரு எலுமிச்சம் பழத்தை உருட்டி விடும்படி தாதியிடம் சொல்லியிருந்தார் அரசர். குழந்தையின் அழுகுரலோடு எலுமிச்சங்கனியும் வெளியில் வந்தது. மளமளவென்று ஜாதகத்தைக் கணித்து பலன் கூறினர் ஜோதிடர்கள்.
அனைத்து ஜோதிடர்களும் குழந்தை நோய் நொடியின்றி வாழும் என்று பலன் கூற, மிகிராகுலன் மட்டும், "குழந்தை மூன்று ஆண்டு, மூன்று மாதம், மூன்று நாட்களே உயிரோடு வாழும்" என்று கூறினான்.