திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த நிலையில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருவதை போலவே மலையை வலம் வரும் பழக்கமே கிரிவலம் எனப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அதே போன்று அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இருவரும் மலையினை சுற்றி கிரிவலம் வந்தனர்.
அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.
கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ அல்லது திருமுறைகளையோ மட்டுமே உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது. மலைவலப்பாதையில் அஷ்டலிங்கங்கள், நந்திகள், 300 க்கும் மேற்பட்ட குலங்கள் உள்ளன.
இந்திரலிங்கம் ( கிழக்கு திசை), கிரிவலத்தில் முதலாவது லிங்கம்
அக்னிலிங்கம் ( தென்கிழக்கு), செங்கம் சாலையில் அமைந்துள்ள இரண்டாவது லிங்கம்.
எமலிங்கம் (தெற்கு) கிரிவலப்பாதையில இராஜகோபுரத்தில் இருந்து 3 வது கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மூன்றாவது லிங்கம்.
நிருதி லிங்கம் – (தென்மேற்கு) கிரிவலப்பாதையில் 4 வது லிங்கம்.
கிரிவலப்பாதை
வருண லிங்கம் (மேற்கு) இராஜகோபுரத்திலிருந்து 8 வது கி.மீ. அமைந்துள்ள 5 வது லிங்கம்.
வாயுலிங்கம் – (வடமேற்கு) கிரிவலப்பாதையில் ஆறாவது லிங்கம்
குபேர லிங்கம் (வடக்கு) கிரிவலப்பாதையில் 7வதாக அமைந்துள்ள லிங்கம்.
ஈசான்ய லிங்கம் – வடகிழக்கு) எட்டாவது மற்றும் கடைசி லிங்கம்.
இந்த லிங்கங்களை வலம் வருவது மிகவும் நல்லது .