சுவாமிக்குரிய வழிபாடுகளில் அர்ச்சனை என்பது முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு மலர்களைப் பயன்படுத்தி சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்வது வாடிக்கை. ஆனால் மலர்கள் மட்டுமின்றி, அர்ச்சனையில் இலைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது பலரும் அறியாதது. அந்த வகையில் எந்தெந்த இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்ய, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
• முல்லை இலை: அறம் வளரும்.
• கரிசலாங்கண்ணி: வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
• வில்வ இலை: இன்பம் மற்றும் விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
• அருகம்புல்: அனைத்து சௌபாக்கியங்களும் உண்டாகும்.
• இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.
• ஊமத்தை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
• வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்.
• அரளி இலை: செய்யும் அனைத்து முயற்சியிலும் வெற்றி பெறலாம்.
• எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
• நாயுருவி: முகப்பொலிவும் அழகும் கூடும்.
• கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் உண்டாகும்.
• மருதம்: மகப்பேறு வாய்க்கும்.
• விஷ்ணுகிராந்தி: நுண்ணறிவு கைகூடும்.
• மாதுளை: பெரும் புகழும் நற்பெயரும் சேரும்.
• தேவதாரு: எதையும் தாங்கும் மனோ தைரியம் உண்டாகும்.
• மருக்கொழுந்து: இல்லற வாழ்வு சுகம் பெறும்.
• அரசம்: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
• ஜாதிமல்லி: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் வாய்க்கும்.
• தாழம் இலை: செல்வச் செழிப்பு உண்டாகும்.
• அகத்தி: கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.
• தவனம் ஜகர் பூரஸ இலை: நல்ல கணவன் மனைவி அமையும்.